பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

முருகுசுந்தரம்




நீ தமிழரின் .
வார்த்தை வசந்தம்!
நாக்கு நாகரிகம்!
கனவின் நனவு!
நனவின் கனவு!
புதுவானத்தின்
புல்லரிப்பே செங்கதிர்!
நீயோ-
எங்கள் இதயத்தின் புல்லரிப்பு.


சிலம்பு-
இயலுக்கு இயல்
இசைக்கு இசை
நாடகத்துக்கு நாடகம்
நீயோ-
அண்ணனுக்கு அண்ணன்
தொண்டனுக்குத் தொண்டன்
தலைவனுக்குத் தலைவன்
நீயும் ஒரு முத்தமிழ்க் காப்பியம்!


நீ ஒரு குறள்!
எனவே...உனக்கும்
உலகம் உள்ளளவும்
உரையெழுதிக் கொண்டிருப்போம்.