பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

முருகுசுந்தரம்



எத்தனை பூ மலர்ந்தாலும் முல்லை போல
இலக்கியத்தில் மணக்கின்ற பூக்கள் இல்லை;
எத்துனை நூல் இருந்தாலும் குறள்போல் நம்மை
எடுத்துயர்த்தும் பெருநூல்கள் எதுவு மில்லை.
எத்தனையோ திங்கள்வந் தாலும், தைபோல்
இனிக்கின்ற திங்களில்லை; இந்த நாட்டில்
எத்தனையோ அரசிருந்தும், கலைஞர் ஆட்சி
இருப்பதுபோல் நிலையான ஆட்சி யில்லை.


நெய்யாட்சி மணக்கின்ற பொங்கற் சோற்றை
நெடுவாழை இலைமீது படைக்கு மிந்தத்
தையாட்சி போல்மணக்கும் தமிழர் ஆட்சி
தழைத்தோங்க வாழ்த்துகிறேன்: நடிக்கும் தீய
பொய்யாட்சி புரட்டாட்சி நமக்கு வேண்டாம்:
பொங்கல்விழா இங்கிருக்க நமக்கேன் ஒணம்?
கையெல்லாம் நெய்யொழுகப் பொங்க லுண்டு
களிப்பவர்க்குத் தேவையில்லை. கஞ்சி வள்ளம்!