பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தரத்தின் நிலையை வெளிப்பூச்சின்றி, ஒளிவு மறை வின்றி வெளியிடுவதாகும். கற்பனார்த்தத்தைப் பற் றித் திட்டவட்டமான திருப்தி தரும் பதில் இன்னும் அளிக்கப் பெறவில்லை. ஆகவே, பால்ஸாக், டால்ஸ் 2. ய், கோகோல், செஹாவ் முதலிய எழுத்தாளர்கள் கற்பதார்த்தவாதிகளா, எதார்த்தவாதிகளா என்று சொல்ல முடியவில்லை. அநேக எழுத்தாளர்களிடம் கற்பனர்த்தமும் எதார்த்தமும் இணைந்தே இருக் கின் றன. கற்பனர்த்தத்துக்கும் எதார்த்தத்துக்குமுள்ள தொடர்பை உணர எழுதும் ஆர்வம் ஏன் வர வேண்டும்?' என்ற கேள்வியைப் புரட்டவேண்டி 2) துதான். இதற்கு இரண்டு விடைகள் உண்டு. ஒன்று : பதினைந்து வயதுள்ள தொழிலாளி வர்க்கப் பெண் ஒருத்தி எனக்கு எழுதினாள்: "எனக்குப் பதினைந்து வயது தான், இந்த வயதிலேயே எனக்கு எழுதும் சக்தி - வந்து விட்டது. காரணம் எனது பஞ்சை நிலையும் சலித்துப்போன உயிர் வாழ்க்கை பும்தான். இன்னொரு எழுபது வயதுக் கிழத் தொழிலாளி எழுதுகிறான் : எனக்குள்ள அனந்த (கோடி அனுபவங்களை எழுதாமலிருக்க முடியவில்லை!" என்னோடு கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்!கள் எழுத்தாளனாக ஆசைப்படுவதன் காரணம் அவர்கள் மனத்தில் புகைமுட்டித் தவிக் கும் அனந்தகோடி அனுபவங்கள் இருப்பதனால் தான். தாங்கள் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வந்த இன்ப துன்பங்களை அவர்களால் எழுதாம் லிருக்க முடியவில்லை. ஆகவே எப்படி எழுதினேன்