பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்ற எனது கேள்விக்கு நானும் வறுமையில் வாடினேன்; எனக்கும் பல்வேறு. அநுபவங்கள்" இருக்கின்றன. அந்த உணர்ச்சிப் படங்களை என்னால் தீட்டாமல் இருக்க முடியவில்லை” என்றே சொல்வேன். வாழ்வின் பயங்கர த்தைப் பற்றி எனக்கு, அநேக அனுபவங்கள் உண்டு. இப்போது நான் அதைக் குருட்டுப் பயம் என்கிறேன், இளமை அனு: பவத்தில் நான் கண்ட அனுபவங்களைச் சொல்லப் போனால், நீங்கள் பார்த்திராத கீழ்த்தரமான அனு பவங்களாகவே இருக்கும். சில வேளைகளில் இந்தக் கைப்பான வாழ்க்கை எனது உணர்ச்சிகளை - மழுங்க அடித்து என்னை ஒரு தூங்கிணியாக்க முயன்ற துண்டு. சில சமயங்களில் அவை என்னைக் கிண்டி விட்டு எனது மான உணர்ச்சியைத் தூண்டியது முண்டு. ஆகவே இதற்கு ஒரு மார்க்கம் தெரியாமல், இரவில் கூரையேறித் திரிவதும், தாத்தா செய்யும் வேலையில் கரியை அள்ளித் தூவுவதுமாக இருந் தேன். இதை யெல்லாம் நான் ஏன் செய்தேன் என்றால் நான் உயிருள்ள பிராணி என்று காட் டிக்கொள்வதற்குத்தான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்த இந்த வாழ்வை மாற்றவேண்டு மென்று நினைத்தேன். சரி. இனி நான் எப்படி எழுதப் படித்தேன் என்பதற்கு வரலாம். எனக்கு ஏற்பட்ட அனுபவங் கள் புத்தகங்கள் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமா கவுமே கிடைத்தன. நான் வெளிநாட்டு இலக்கியங் களுக்கு--முக்கியமாக பிரெஞ்சு - இலக்கியத்துக்குமிகவும் கடமைப்பட்டவன்.. என் தாத்தா ஒரு கஞ்