பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சன்! ஆனால் நான் அவரை பால்ஸாக்கின் 'கிராண் வட்ட்' என்று கதாபாத்திரத்தின் மூலமே புரிந்து கொண்டேன், அதே மாதிரி என் தாத்தாவின் நன்பர்கள் தாக்கரேயின் 'வானிட்டிபேரி'ல் (Vanity Fair) பேசுவதுபோலவே பேசினார்கள். இப்படித் தான் பல அனுபவமும். எனது படிப்பு ஒழுங்கு முறையற்றது; கிடைத்த போது சமயம் வாய்த்தபோது படித்தேன், வெளி நாட்டு இலக்கியம் எனக்கு ஒப்புவமை நோக்குவி கற்க ஏராளமான விஷயங்களையும், விஷயத்தை எடுத்துச் சொல்வதையும், கதா பாத்திரத்தைத் தொட்டுப் பழகும் பாணிகளையும் சொல்லிக் கொடுத் து. ஒரு தடவை பிளாபேரின் 'சாதாரண இதயம்' A Simple Heart) என்ற நூலைப் படித்தேன். அதைப் படித்துக் கண் மூக்குத் தெரியாமல் ஆடி *னேன். சர்வம் தாரண TET, நாமறிந்த, வார்த் கைகளை வைத்துக்கொண்டு - எப்படி ஒரு சாதாரண விஷயத்தை ரசீகச் சொல்ல முடிகிறது. என்று அதி சவித்தேன். எனக்கு அது ஒரு புதிராக இருந்தது. நான் படித்த பிற இலக்கியங்கள் இருக்க, பிரெஞ்சு இலக்கியத்திலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன். இது தற்செயலாக நடந்தபோதிலும், இளம் எழுத்தாளர்கள் கட்டாயம் பிரெஞ்சு இலக்கிய மேதைகளின் நூல்களைப் படித்து அவர்களின் சொல்லாட்சிக் கலையை உணர்ந்து கொள்ள வேண் டும் என்றே சொல்வேன். எனக்கு இருபது வயது ஆனபோது, நான் கண்ட, கேட்ட அனுபவித்த பல விஷயங்களை மற்ற