பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 வர்களுக்கும் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதினேன். ஏனெனில் மற்றவர்களின் மனப் போக்குக்கு மாறாக நான் புது வழியில் சில விஷயங் களைக் கண்ணோக்குகிறேன் என்று எனக்குப் பட்டது, இதற்கிடையில் நான் வசித்த இடத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் நான் கதை சொன்னால் கூர்ந்து ஆர்வத்தோடு கேட்க ஆரம்பித்தனர். புத்த கங்களைப் பற்றியும் சொல்வேன். எனது கதைகளைக் கேட்ட அறிவாளிகள் ' எழுது! எழுதப்பா எழுது" என்று தூண்டினார்கள். அடிக்கடி எனக்குக் குடி மயக்கம்போல். தான் அனுபவித்த இன்ப - துன்பங்களை வெளியிட்டுத் தீர்க்க எண்ணும் ஆர்வம் மனத்தைப் பிய்த்துப் பிடுங்கும். இந்த அவஸ்தையைச் சொல்லித்தான் தீர்க்க விரும்பினேன். ஆகவே தான் என் மனத்தில்" உறைந்து போன சித்திரங்களான என் நண்பன் அனடோலி, சந்துமுனைத் தாசி மகளான தெரஸா முதலியவர்களைப் பற்றி எழுத விரும்பினேன். அவர் களைப் பற்றிச் சில பாடல்கள் எழுதினேன். பாடல் . எழுதுவது எனக்குச் சுலபமாகக் கை வந்தது. எனினும் அவை மோசமானவை. என்னு னுடைய சக்தியின்மையை, திறமை இன்மையை நானே உணர்ந்தேன். புஷ்கின், லெர்மெண்டோவ், குரோச்கின் முதலிய கவிஞர்களைப் படித்தபோது நான் ஒரு உதவாக்கரை என்றே பட்டது. நானோ வசனம் எழுதுவதற்கே பயந்தேன்; பாடலைவிட வசனம் எழுது வது சிரமம் எனக் கருதினேன். இதன் விளைவு: நான் வசன கதி படைத்த பாடலாங் எழுதியது தான்