பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 பழகிய தோஷத்தால் அந்த வர்க்கத்தைச் சூழ்ந்துள் னவர்கள்; அவர்களை எப்படிக் கொக்கியிட்டு வதைக் கிறார்கள், அவர்களது வியர்வையையும் குருதியையும் எப்படி காபெக்குகளாகவும், ரூபிள்களாகவும் (காபெக், ரூபிள் -ருஷ்ய - நாணயங்கள் மாற்றுகிறார்கள் என்பதையும் எனது பதினைந்தாவது வயதி லேயே நேரில் அனுபவித்தேன். ஆகவே, இந்தப் புல்லுருவிகள் வாழ்க்கையைக் கண்டு மனம் புழுங்கி னேன். பஞ்சைப் பரதேசிகள் என்பவர்கள் என்னைப் பொறுத்த வரை சாதாரண மனிதர்கள். ஏனீெனில் அவர்கள் வர்க்கம் இழந்தவர்கள்; அவர்கள் வர்க்கத் தின் தன்மையை இழந்தவர்கள் இப்படிப் பட்ட பலரை' நான் வழியில் சந்தித்திருக்கிறேன். நானும் இன்னொரு மனிதனும் ஆஸ்பத்திரியில் சீக்காகக் கிடந்தபோது அவன் சொன்ன கதையைத்தான் நான் எனது செல்காஷ்' (Chelkash} என்ற கதைக் குப் பயன்படுத்தினேன். அவன் அலெக்ஸாண்டர் டூமாஸின் "மகா வீரக்” கதா நாயகர்களை நினைவூட்டி னான். ஆகவே தான் இந்தப் பஞ்சைப் பரதேசிக ளின் சாதாரண வாழ்வைப் பிரதிபலிப்பதில் என் மனம் நாடியது. இவர்களைவிட, குட்டி பூர்ஷ்வா மனப்பான்மை கொண்ட மக்கள் என்னை அதிகம் கவரவில்லை . என்னைப் பொறுத்த வரையில், மனிதனை மிஞ் சிய கருத்துக் கிடையாது. மனிதன் தான்--மனி தன் மட்டும் தான் சகல பொருள்களுக்கும் கருத்துக் கும் சிருஷ்டி கர்த்தா. அவனே மாயாஜாலன்.