பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சந்திப்பு ஆற்றங்கரையை ஒட்டிய தோப்பின் ஓரத்தில் அமர்ந்து நீரில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைக் கவனித் துக் கொண்டிருந்தாள் ஒரு குடியானவச் குமரி. . அவளைச் சுற்றி ஓம் பரந்திருந்த மணல் வெளியில் பழுத்து மஞ்ச ளாய்ப் போன இலைகள் சிதறிக்கிடந்தன; பழுப்பிலைகள் எந்தவித அரவமுமின்றி அவளது தலைக்கு மேலாக உதிர்ந்து விழுந்து அவளது தோளிலும். துணியிலும் பதிந்து உட்கார ஆரம்பித்தன. பல இலைகள் அவளது முந்தியில் விழுந்து கிடந்தன. அந்த இலகளில் ஒன்றை யெடுத்து, அதைத் தன் விரல்களால் சுற்றிச் சுழற்றிக் கொண்டிருந்தாள்; மற்றொரு கையில் நீண்டு வளர்ந்து நெளியும் ஒரு கொடி, மிளாரை வைத்திருந்தாள், அவள் உயரமாகவும் ஊதிப்பாகவும் இருந்தாள், குடியானவர்கள் அணியும் ஆடைகளில் அவள் அணிந்திருந்தது உயர்தர மான ரீகம், எனினும் அவளது உருண்ட முகத்தில் சோகம் பிரதிபலித்தது. நீர்ப் பரப்பின் மீது நீஃபத்து நின்ற அவளது கண்கள் தீக்ஷண்யமும் திடமும் கொண்டு சிந்தனை வயப்பட்டிருந்தன, கரையருகே சமீபத்தில் தான் மயிர் கத்தரித்துவிடப் பட்..... ஆடுகள் இலைகளை மேய்ந்து கொண்டிருந்தன. அவை யனைத்தும் துரதிருஷ்டசாலிகளைப் போல் அனுதாபத்துக் குரியன போல் தோன்றின. ஆற்றுக்கு அப்பாலுள்ள மரங்கள் இலையுதிர் காலத்தின் வர்ணமாற்றத்துக்கு ஆளாகி, பழுப்பு நிறத்துக்கு அடிமையாகிக் கொண்டிருந் தன. செக்கச் சிவந்த ரோவான் கோத்துக்கள் ரத்தக் காயங்களைப் போல் துருத்தி நின்றன. அன்றைய தினம் அமைதியும் சூரிய ஒளியும் கதகதப்பும் நிறைந்த தினம்; செல்லாகிப் போகும் பருவ காலத்தின் சோகச் சூழ்நிலை நிறைந்து நின்ற நாள்.