பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 அந்த வாலிபன் தலையைத் தாழ்த்திக் கொண்டே சொன்னான். “சரித்தான்....... அவர் சொன்னது நிசம்...இல் லையா?” அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று அவர்களது பக்கமாக வந்தது; வாயிலுள்ள இரையை ஆசை போட்டுக்கொண்டே, பஞ்சடைந்த தன் குறு குறுத்த கண்களால் அவர்களை ஏறிட்டுப் பார்த்தது--ஒரு மீன் ஆற்று நீரில் துள்ளிப் பாய்ந்தது; அதன் துள்ளலால் தெறித்துச் சிதறிய நீரில் சூரிய ஒளி வெள்ளி பயமாக மின்னி மினுக்கிச் சொடுக்கி மறைந்தது. தூரத்தில் எங்கோ யாரோ ஒரு ஆர்மோனியத்தை வாசித்துக்கொண் டிருந்தார்கள். ஒரு மாடு கனைத்தது; ஒரு நாய் கோபா வேசமாகக் குலைத்தது. பூம் பூம் என்ற தமர ஒலி மங்கிப் போய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நான் ஏழைதான். அது நீசம்; ரொம்ப நிசம்தான். ...நான் வேறே எப்படி இருக்கமுடியும்? என் உடம்பு நல்ல ஸ்திதியிலே இருக்கு என்பதைத் தவிர வேறே எனக் குன்னு ஒரு ஸ்திதி இல்லை...என்றாலும் நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு நல்லா வாழ்ந்திருக்க முடியும்! இல்லையா, பாலஷ்கா ! - அவன் அவளது தோள்களைத் தொட்டுக்கொண்டே அவளது முகத்தைப் பதிலை எதிர் பார்ப்பது போல் பார்த் தான். “அவர் என்ன. சொன்னார் தெரியுமோ? 'அவனைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். ஒரு பணக்காரக்குடி பானவனுக்கு அவன் ஒன்றும் மருமகனாக வரப் போற தில்லை.' அப்படின்னார்" அந்தப் பெண் திடீரென்று உணர்ச்சி பரவசமாகி, "அவன் ஒரு பிச்சைக்காரப் பயல். அவன் என்னிடம் வேலைக்காரனாக இருக்கக் கேட்கலாம். என் மருமகனாக இருப்பதற்காக அல்ல....அப்படின்னும் சொன்னார்? என்று சொன்னாள். "சரி, நீ என்ன பண்ணினே? என்று சோர்ந்து போய்க் கேட்டான் அந்த வாலிபன்.