பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எப்படிக் கட்டிப் பிடிக்க முடியாதோ, அது போலவே அந்த விதியையும் உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது! அந்தப் பெண் அவனை ஆர்வத்தோடும் சோகத் தோடும் பார்த்தாள்; பெரு மூச்சு விட்டாள். அவனோ தூர தொலைவை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். உங்க அப்பா அப்படிச் சொன்னா, அப்படித்தான் கடக்கும். அவர் - மனத்தை நீ ஒண்ணும் மாத்திட முடி யாது. அவர் அவ்வளவு தீர்மானமா யிருக்கார். 'மீ அவர் தலைமேலே தடிகொண்டு தாக்கினாலும், கிழட்டுப் பிசாசு! அது ஒண்ணும் அசைந்து கொடுக்கப் போற தில்ல... இல்லையா? அவர் ஒண்ணும் விட்டுக் கொடுக்க மாட்டார்." அவர் பமாட்டார்? நான் என் கண் முழி பிதுங்கக் கதறிக்கூட்ட, அவர் மனசு இளகக் காணமே?'” என்று தலை யைக் குலுக்கிக் கொண்டே அந்த யுவதி பெரு மூச்சு விட்டாள். “சரி, இது தான் முடிவு, நாம் அதிர்ஷ்ட க் கட்டை கள். இல்லையா', பாலஷ்கா; இதுதான் நம்ம தலை விதி. இல்லையா?" “சரி. . நாம் இனி என்ன பண்ணுகிறது? என்று தணிந்து துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவள். "என்ன நினைக்கிறே? நான் இங்கேருந்து போயி, எங்காவது ஒரு பாக்டரியிலே வேலை பார்க்கப்போறேன், அந்த வேலையும் புடிக்கலேன்னா, வேறே எங்கேயாவது போவேன்...அதனாலே... இப்போ நாம் ஒருவருக் கொரு வர் விடை பெற்றுக்கொள்ள வேண்டியது தான் ” , அவள் அவனைத் தனது அகன்ற கண்களால் வெறித்துப் பார்த்தாள்; மறு கணம் அரவமின்றித் தன் முகத்தை அவனது மார்போடு புதைத்துக் கொண்டாள், அவன் ஒரு கரத்தால் அவளை வளைத்து அணைத் தான்; நடு நடுங்கும் அவளது தோள்களைப் பார்த்தான்; பிறகு தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருக்கும் நீர்ப் பரப்பில் தங்கள் இருவரது உருவங்களும் கண்ணாடியில் தெரிவது போல் பிரதிபலிப்பதைப் பார்க்க ஆரம்பித்தான்.