பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 போயிடும். உனக்கு அந்த வழியும் தெரியலே, என்னையும் பரிபூரணமாகக் காதலிக்கலே......என்னமோ..." 'ஸ்டீபன் !” என்று அழுது கேவிக்கொண்டே அவ னது முகத்துக்கு நேராகத் தன் கண்களை உயர்த்தினாள் அவள், “ஆனா, நீ கல்யாணமே பண்ணிக்காம இருந்தா, அது. பாவம்...பாவகாரியம்...எப்படிப் போனாலும் நான் ஏதாவது தில்லு முல்லு பண்ணினா என்னை அவங்க அடிச்சு நொறுக்குவாங்க, நொண்டியாக்குவாங்க...எப்படி. யும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்காதபடி செஞ்சுப் புடுவாங்க." - "சரி" என்று அமைதியாகச் சொன்னான் அந்த இளை ஞன். அது உன் காரியம். அதை நீ தான் முடிவு செய் யணும், நீ மட்டும் என்னை. செம்மாவே காதலிச்சேன்னா, ஒண்ணுரெண்டு அடிபட்டால் தான் என்ன மோசமாப் போச்சு? ஒண்ணும் குடி முழுகிப்போயிடாது !" அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்; அவனை விட்டு விலகிப் பிரிந்து திரும்பிக்கொண்டாள். அவன் மேலைத் திசையில் மூழ்கிக் கொண்டிருக்கும் சூரியனைக் கையால் முகத்துக்கு நீழல் கொடுத்து ஏறிட்டுப் பார்த்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: மணியும் நாலுக்கு மேலே இருக்கும் போலிருக்கு. தேவாலய பூஜைக்கு சீக்கிரம் மணியடிச்சிடுவாங்க. நாளைக் காலையிலே நான் அதிகாலையிலேயே எழுந்திருப்பேன். உடனே புறப்பட்டுப் போயிடு வேன். அத்தோடு இந்த விஷயமும் ஒரு வழியா முடிஞ்சி போயிடும்/ “அதைப்பத்தி, என்னைப்பத்தி நீ வருத்தம் கூடப் பட மாட்டியா?” என்று கண்ணீர் ததும்பிய கண்களோடு கேட் டாள் அவள். வருத்தப்படுவேனோ இல்லையோ, அது என் கவலை யில்லே!" என்று சோர்ந்து சோகக்குரலில் சொன்னான் அவன். அவன் தண்ணீரைப் பார்த்தான். அந்தப் பெண் தன் இருகரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு தலை இங்கு "மங்கும் அசைந்தாட, தோள்கள் இரண்டும் நடு நடுங்கித்