பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தன் தலையை முழங்கால்களுக் கிடையில் புதைத்தவாறே இருந்தாள். அவன் அந்தப் பெண்ணின் முகத்தையே வெகுநேரம் பார்த்தான்; ஏக்கம்பிடித்த கண்களால் பார்த் தான்; அவன் முகம் சுருங்கியது. பிறகு அவன் சொன்னான்: சரி... நான் வருகிறேன்." “சரி. போய்வா" என்று லேசாகத் தலையை அவனை நோக்கி உயர்த்திக்கொண்டே முனகினாள் அவள். "நாம் கடைசித் தடவையா முத்தமிட்டுக் கொள் வோம்” என்றான் அவன். அவள் எழுந்து நின்றாள்; தன்னை. அவனது மார் போடு பொருந்த அணைத்துக்கொண்டு அவனது கழுத்தைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டாள். அவன் அவ ளது உதடுகளில் அசுர வெறியோடு அழுத்தமாக முத்த மிட்டான். கன்னத்தில் முத்தமிட்டான், பிறகு அவளது கரங்களை விலக்கிக்கொண்டே அவன் பேசினான்: நாளை நான் போய்விடுவேன். போய்வரட்டுமா? கட வுள் உனக்கு நல்ல வாழ்க்கையை அருளட்டும். அவங்க உன்னை ஸாஷ்கா நிக்கோனோவுக்குத்தான் கட்டிக் குடுப் பாங்கன்னு நினைக்கிறேன். நல்ல பயல் தான். கொஞ்சம் மந்த புத்தி; ஆளும் நோஞ்சான்; அவ்வளவு தான். அவன் விஷயம் எப்பொழுதுமே அப்படித்தான். சரி, வரட்டுமா? அவன் அங்கிருந்து அகன்றான். அவள் தன் முகத்தை. சிவந்து கன்றி வீங்கிப் போயிருந்த தன் முகத் தைத் திருப்பி அவன் போவதைப் பார்த்தாள்; ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கை பிறந்தது போல, அவள் அவனை மீண்டும் கூப்பிட்டாள். "ஸ்டீபன் “என்ன?” என்று திரும்பிக்கொண்டே கேட்டான். "போய்வா' “வருகிறேன்' என்று உரத்த குரலில் சொன்னான் அவன். சிறிது நேரத்தில் அவன் தோப்புக்கு அப்பால் கண் மறைந்து போய்விட்டான்.