பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தாலாட்டு புழுக்கம் நிறைந்த அந்தக் கோடை யிரவில், நகருக்கு வெளியே ஒதுக்குப் புறமாயழைந்த அந்தப் பாதையில் ஒரு காட்சியைக் கண்டேன். சேறு நிறைந்த குட்டை. யொன்றின் நடுவே காலூன்றி நின்று கொண்டு, சிறு பிள்ளையைப் போல, சகதியை வாரியடித்துக்கொண்டிருக் தாள் ஒரு பெண், காலூன்றி நின்றவாறே, ஆபாசமான பாட்டொன்றை மூங்கைக் குரலில் பாடிக் கொண்டிருக் தாள். அன்று ஊருக்குள் சரியான புயல் அடித்து ஓய்ங் திருந்தது; பலத்த மழை கரிசல் பூமிப்பாதை முழுவதையும் சேறாக்கிவிட்டது. அந்தக் குட்டை ஆழம் உள்ளது... அந்தப் பெண் முழங்காலளவு ஆழம் வரையிலும் அதில் இறங்கியிருந்தாள். அவளுடைய குரலை வைத்து நிதா னித்தால், அவள் குடித்திருக்கிறாள் என்பதை அறிய லாம். ஆட்ட பாட்டத்தால் களைப்புற்று அவள் சாய்ந் தால், அந்தச் சேற்று நீரில் அவள் எளிதில் மூழ்கிவிடக் கூடும். - நான் எனது நெட்டையான பூட்சுகளை - இறுக்கிக் கட்டிக்கொண்டு, குட்டைக்குள் இறங்கி அவளது கரங் களைப் பற்றியிழுத்துக் கரைக்குக் கொண்டுவந்தேன். முதலில், அவள் திடுக்கிட்டுப் போனாள். வாய் திறவாது, என்னைப் பின்தொடர்ந்தாள். பிறகு திடீரென்று தனது முழு உடம்பையும் ஒரு உலுப்பு உலுப்பி, தனது கையை விடுவித்துக் கொண்டு, என் மார்பில் அறைந்தாள்; கூச் சீலிட்டாள், “ உதவிக்கா வாரே /" மீண்டும் மீண்டும் என்னையும் இழுத்துக் கொண்டு, அந்தக் குட்டைக்கு ஓடினாள். ': பிசாசுப் பயலே ! நான் போகமாட்டேன். என்னை விட்டுவிட்டு நீ போய்விடு, நானும் ' உன்னை விட்டுப் போகிறேன்... உதவியா...?" அவள் குழறினாள்.