பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 தெரிந்தது; சிகரெட்டை எனது முகத்துக்கு நேராய் ஏங் திப் பிடித்தவாறே அந்தச் சகதிப் பாதையில் நடந்தான்.. “கூட்டிக்கொண்டு போ, ஆனால் அவள் மீது படிந் திருக்கும் சகதியைக் கவனி." அதற்குள் அந்தப் பெண் சேற்றுக் குட்டையில் அமர்ந்து கொண்டு, சகதியை வாரியிறைத்துக் கொண்டு, மூங்கைக் குசலில் பயங்கரமாய்க் கத்தினாள். "அந்த-ஆழமான-- கடலிலே" கொழு கொழு வென் றிருக்கும் அந்தச் சேற்று நீரில், பரந்த வானக் கருமையின் ஓரத்திலே நின்று மினுங்கும் பெரிய தாரகை ஒன்று பிரதிபலித்தது. அந்த நீரில் ஒரு சிற்றலை வீசினதால், பிரதிபிம்பம் மறைந்தொழிந்தது. மீண்டும் நான் அந்தக் குட்டையில் இறங்கி, அவளுடைய கட்கத்தில் கைகொடுத்துத் தூக்கி, என் முழங்காலால் அவளைத் தாங்கி, வேலீப் புறமாகக் கூட்டி வந்தேன். அவளோ கைகளை ஆட்டிக் கொண்டு, இடக்குப் பண்ணிக் கத்தினாள், "அடிக்கத்தானே செய்வே அடி. நல்லா அடி. பரவா யில்லெ. சீ, மிருகமே! கொலைகாரா போரியா! இல்லியா! அடிக்கவா செய்தே!" அவளை வேலியின் மீது சாத்தி வைத்து அவளது இருப்பிடத்தைக் கேட்டேன். அவள் தனது வெறியேறிய தலையை உயர்த்தி, கரும்புள்ளி போன்ற கண்களால் கூர்ந்து பார்த்தாள். அவளுடைய மூக்கு உள் வாங்கிப் போயிருப்பதைக் கண்டேன். வெளியே நீட்டிக்கொண் டிருந்த பாகம், ஏதோ பித்தானைப் போலத் தானிருந்தது, அவளுடைய மேலுதடு கோரைப் பட்டுக் கோணி ஒதுங்கி யிருந்தது; சிறுபற்கள் வெளியே தெரிந்தன; அந்த வதங் கிய முகத்தில் வெறுக்கத்தக்க புன்னகை நெளிந்தது. "சரி, நாம் போகலாம்” என்றாள் அவள். நாங்கள் இருவரும். அந்த வேலிப் புறமாகவே சென் சோம்; அவளுடைய சட்டையில் படிந்திருந்த சேறெல்லாம் என்னுடைய கால்களில் தெறித்து விழுந்தது.