பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என் கண்ணே !" என்று கூறியவாறே, அவள் சுவர் மூலையில் தடுமாறிச் சாய்ந்தாள்; அங்கு தரையை ஓட்டி னாற் போல் ஒரு பெரிய படுக்கை கிடந்தது. விளக்கின் சுடரைக் கூர்ந்து கவனித்தவாறே, அந்தப் பிள்ளை புகை உமிழும் திரியைச் சரியாக்கினான். அவ னுடைய முகம் வக்கிர அமைதி கொண்டது; மூக்கு கூரி யது; உதடுகள் பெண்களுடையதைப்போல் தடித்திருந்தன. மெல்லிய பிரஷ்ஷைக் கொண்டு வரைந்த சித்திரம் போலிருந் தது அந்த முகம்; இருளும் ஈரமும் நிறைந்த அந்தப் பொந் தில் அப்படிப்பட்ட முகத்தைப் பார்ப்பதே அதிசயந்தான். விளக்கைச் சீர்படுத்திய பின்பு, சுருங்கி வதங்கிப் போன கண்களை என்மீது திருப்பிக் கேட்டான் : "குடிச்சூட்டு வந்திருக்காளா?" படுக்கையிலே கிடந்த அவனுடைய தாய் குறட்டை விட்டாள்; கொர் கொர் என்ற தொறட்டிழுப்பும் வந்து கொண்டிருந்தது. < அவளுடைய ஆடைகளைக் கழற்றவேண்டும்" என் றேன் நான்.. "கழற்றேன் " என்று பதில் கூறிவிட்டு, பையன் கண்களைத் தாழ்த்தினான். - அவளது நனைந்த அங் கியை நான் கழற்ற ஆரம்பித்தபோது, அந்தப் பையன் அமைதியாகவும் வியாபாரார்த்தமாகவும் கேட்டான், " விளக்கு?--அதை அணைச்சுரட்டுமா?' எதற்காக ? அவன் பதில் கூறவில்லை. நான் அவளை ஒரு மாவு மூட்டையைப் போல் கையாளும் போது அவனைப் பார்த் தேன். அவன் தரையில் கிடந்த கனத்த பலகைப்பெட்டி யின் மேல் உட்கார்ந்திருந்தான்; பெட்டியின் மேல் “ஜாக் கிரதையுடன் கையாளவும். என். ஆர். அண் கோ” என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. அந்தப் பையனுடைய தோள் அக்தச் சதுர ஜன்னல் பலகையில் சாய்ந்து பதிக் திருந்தது. சுவரை யொட்டி சில அரங்குகள்; அவைகளில் சிகரெட்டுப் பெட்டிகளும் தீப் பெட்டிகளும் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன. பையன் உட்கார்ந்திருந்த பெட்டியை மகன். அவன் தலால் கையாளும் நான் அவளை