பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 'நான் ஒன்னோடே கொஞ்ச நேரம் இருக்கலாமா ? என்று கேட்டான் பையன். தலையைத் தாழ்த்திப் புருவங் களுக்குக் கீழாக என்னைப் பார்த்தான்; “விடியற வரையில் அவ எந்திருக்கமாட்டாள் என்றான், ' ஆனால் - அவள் எனக்குத் தேவையில்லை" என் றேன் நான். அவனுடைய பெட்டியருகே குந்தி யமர்ந்துகொண்டே அவனது தாயை நான் எப்படிச் சந்தித்தேன் என்ற விஷ யத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றேன்: அவள் சகதியிலே உட்கார்ந்து. கைகளால் களைந்து கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தாள்...” அவன் தனது நெஞ்சுக் கூட்டைச் சொரிந்தவாறே, வதங்கிய புன்னகையுடன் தலையாட்டினான். " குடித்திருந்தாள் - அதனால் தான் அப்படி; சுவா தீனமாய் இருந்தால்கூட அப்படித்தான் செய்வாள். ஒரு குழந்தையைப் போல..." இப்போது நான் அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய கண் 'ரெப்பைகள் நீண் டிருந்தன. கண்ணிமைகளும் அழகாகச் சுருண்ட மயிரிழை களால் நிறைந்திருந்தன. கண்களுக்குக் கீழே பாரித்திருந்த நீலவிறம் ரத்த மிழந்த தோலின் வெளுப்பைக் கூட்டிக் காட்டியது; சுருக்கம் விழுந்த அகன்ற நெற்றியில், செம் பட்டை மயிர்ச் சுருள் கவிந்து கிடந்தது. ஆர்வமும் அமைதியும் நிறைந்த அந்தக் கண்களின் உணர்ச்சிகள் சொல்லுக் கடங்காதவை; இந்த அமானுஷ்யமான அதி சயப் பார்வையைத் தாங்குவதே கஷ்டமாகத்தானிருந்தது, 'உன் கால்களுக்கு என்ன கேடு விளைந்தது?” துணிச் சுருள்களுக்கிடையிலிருந்து அந்தச் சூம்பிய காலை வெளியே எடுத்தான்; மூட்டைக் கோஸ்" தன் டைப் போலிருந்த அந்தக் காலைத் , தனது கையினால் தாக்கி, பெட்டியோரத்தில் வைத்தான்,