பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 ழுங்காது. தேர் நிக்கோ பரதேகோயிலுக் கப்ப போ வோடே தலை மயிரைக் கூட ஒரு நாள் புடிச்சி இழுத்திட் டுது. அது ஈ இல்லே... ஆனா இன்ஸ்பெக்டரோடே பொஞ்சாதி, அதன் வீட்டிலே தெருவெப் பாக்க சன்ன லெல்லாம் உண்டு. பாக்கிறதுக்குத்தான் ஈ மாதிரி, இது வந்து... இது கரும்பாச்சை; பெரிசு; தலைவன். ரொம்ப ஒழுங்குள்ளது. . ஆனால், குடிகார மட்டை ; மான ஈனன் கிடையாது. முற்றத்திலே போய் நிர்வாணமாத் திரியம்; சடை நாய் மாதிரி 'கறும்கம்'னு இருக்கும். இது ஒரு மூட்டைப்பூச்சி; பேரு நிக்கோடிம் மாமா. முற்றத்திலே தான் பிடிச்சேன். இது ஒரு பரதேசிச் சாமி; தன்னை எல்லாரையும் அப்படி மதிக்கவச்சி, கோயிலுக்குப் பணக் திரட்டுது. அம்மா இதை 'ஏமாளி'ன்னு கூப்பிடுவா. அது அவளுடைய காதலன். அம்மாவுக்கு எத்தனை யோ காதலர்கள், ஈக் கூட்டம்போல. நீ, அவ்வளவையும் எண் ணிட முடியாது. அம்மாவுக்கு மூக்கு இல்லாட்டியுங்கூட, அத்தினி பேர்!" “அவள் உன்னை அடிக்கமாட்டாளா?" “அவளா? உனக்கென்ன பைத்தியமா?. நான் இல் லாமெ அவளால வாழ முடியாது. "அவ். மனசு ரொம்ப நல்ல மனசு; ஆனா, குடிக்கமட்டும் செய்யிறா. அன்பும் அருமையும் உள்ளவள் தான்; - ஆனா, -- சிறுக்கி--குடிக்க மட்டும் செய்யிறா. அவள்ட்டே நான். சொல்றேன்: 'முட்டாள் / ஓட்காவைக் குடிக்கிறதை மட்டும் விட்டிரு; நீ பணக்காரி ஆயிருவே.' அப்படின்னா அவள் வெறுமனே என்னைப் பாத்துச் சிரிக்கிறாள். பொம் பிள்ளை - இப்பிடி முட்டாத்தனமா யிருக்கா. ஆனா, நல்ல மனுஷிதான். தூங்கியே பொழுதைக் கழிச்சுருவா; நீ தான் பாரேன்.” அவனுடைய கவர்ச்சி நிறைந்த அங் தப் புன்னகையை நீங்கள் கண்டால் உடனே அவன் மீது அனுதாபம் பிறக்கும்; அவனுக்காக அனுதாபத்துடன் வாய் திறந்து ஓலமிட்டு, ஊர் . முழுதும் ஓவிக்கும்படி செய்துவிடுவீர்கள், .. அவனுடைய அழகமைந்த தலை ஒல்லி யான் கழுத்தின் மேல், ஒரு அபூர்வ மலர் போல ஆடியது: தாங்கமுடியாத சக்தியோடு, அவனுடைய கண்கள் உயிர் பெற்று ஒளி வீசின.