பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 "அப்பன்னா, நீ போகப் போரியா? “திரும்பியும் வருவேன்” அவனால் என்னை நம்ப முடியவில்லை. தனது அமைதி நிலவும் கண்களை மூடி அவன் சொன்னான்: எதுக்காக?" "ஏன்? உன்னைப் பார்க்கத்தான். நீ ஒரு ரசமான பேர் வழி, சரி. நான் வரட்டுமா?" "நிச்சயமா?--எல்லாருந்தான் இங்கே வருவாங்க" பெரு மூச்சு விட்டுவிட்டு மீண்டும் சொன்னான்: "நீ என்னை ஏமாத்தறே" "சத்தியமாச் சொல்கிறேன். வருவேன்” "கட்டாயம் வா, என்னைப் பார்க்க வர. அம்மாவைப் பாக்கிறதுக்கில்ல, அவ எப்படியம் போகட்டும்!- நீயும் நானும் சிநேகிதமா இருப்பமா...ம்...?" “ரொம்ப சரி" "சரி. நீ பெரியவனா இருந்தா, பரவாயில்லை. உனக்கு வயசு என்னாச்சு?" எனக்குப் பதினொண்ணு. எனக்குச் சிநேகிதர்களே கிடையாது. கட்கா மாத்திரம், அவள் அந்தத் தண்ணீர் வண்டிக்காரனின் மகள், என்னோடே சேர்ந்தா அவ ளோடே அம்மா அவளை அடிக்கிறா...ம்... நீ திருடனா?” “இல்லை. ஏன் திருடன் என்கிறாய்?” “ஒன் வாய்- பயங்கரமா யிருக்கு. வெறுந் தோல் மயம் ...ஒன் மூக்குத் திருடனைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் " வருவாங்க. ஒண்ணு, ஸாஷ்கா; முட்டாள்; அசிங்கமான வன். இன்னொண்ணு, வானிச்கா; கல்லவன்; நாய்மா திரி, நல்லவன்...ஒங்கிட்டே சின்னப் பெட்டிகள் இருக்கா" “ வரும்போது கொண்டு வருகிறேன்