பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாக்ஸிம் கார்க்கி (1868-1936) உலகத்தின் முற்போக்கு இலக்கியத்தின் மூலபிதா; சிறந்த கதாசிரியர்; போராட்ட வீரர்களான, லெனின் ஸ்டாலின் முதலியோருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர். பாஸ்கோவில் இவரது பெயரால் ஒரு உத்தியானவனம் இருக்கிறது; இவர் செய்த சேவையைப் பாராட்டி, இவர் பிறந்த ஊருக்கு இவரது பெயரையே சூட்டிக் கௌரவித்துள்ளனர் சோவியத் மக்கள்,