பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நின்ற வண்டியில் ஒரு சிவத்த விவசாயி தனது பெரிய கால்களை அகல விரித்துப் போட்டுத் தூங்கிக்கொண்டிருக் தான். அவனுடைய அடர்ந்த தாடி வானை நோக்கி நிமிர்ந்து நின்றது; அதனிடையில் வெண் பற்கள் மின் வெட்டின. அந்த விவசாயி கண்களை மூடிக்கொண்டு, வெறுப்போடு சிரிப்பது போலிருந்தது அந்தக் காட்சி. காயம் பட்டதனால் மயிரிழந்து முதுகிலே வழுக்கை பெற்ற கிழட்டு நாயொன்று எனது காலடியில் மோப்பம் பிடித் துச் சிணுங்கியது; பசியோடு மெதுவாக ஊளையிட்டது. எனது இதயத்தில் அதற்கு அனுதாபம் பிறந்தது. உஷத் காலத்தில் வெளிறிய பழுப்பொளி சேற்றுக் குட் டங்களில் பிரதிபலித்தது; அந்த அசுத்தமான குட்டை களிலே கண்ட பிரதிபலிப்பு இதய நிறைவைக் கெடுத்து, வேண்டாத அழகை வீணாக்கிக் கொண்டிருந்தது. மறு நாள் நான் எங்கள் வட்டாரத்துப் பையன்களைச் சில மூட்டைப் பூச்சிகளும் வண்ணாத்திப் பூச்சிகளும் படித் துத் தரும்படி வேண்டிக்கொண்டேன், மருந்துக் கடையி லிருந்து சிறு சிறு பெட்டிகள் வாங்கிக்கொண்டேன். பிறகு இரண்டு பாட்டில் வாஸ் பீர்', சில இஞ்சி ரொட்டி கள், சர்க்கரை மிட்டாய்கள் முதலியவைகளோடு லெங்க் காவைப் பார்க்கச் சென்றேன். அகல மலர்ந்த கண்க ளோடும், வியப்போடும் இலங்க்கா எனது பரிசுகளை ஏற் றுக்கொண்டான். அந்தக் கண்கள் பகலொளியில் மேலும் வியப்பூட்டின. "ஓ-ஹோ-ஹோ" என்று அவன் தணிந்த, குழந் தைத் தனம் அற்ற குரலில் கத்தினான். "எல்லாத்தையும் கொண்டு வந்தூட்டியே! நீ பணக் காரனா? அது எப்படி- பணக்காரன்னா...ஆனா, நீ ரொம்ப மோசமாய் உடை உடுத்தியிருக்கே! திருடன் இல் வேன் னும் சொல்றே.., இந்தச் சின்னப் பெட்டிகள், ஓ-ஹோ ஹோ...என் ' கையெல்லாம் சுத்தமாயில்லே. அதைத் தொடவே கூசுது. உள்ளே என்னா இருக்கு? ஆமா, ஒரு மூட்டை களிம்பேறிய செம்பு மாதிரியில் லெ இருக்கு சீ மூதீ!... இவை யெல்லாம் திதந்தாப் பறந்தோடிப் போயி