பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேளை எங்கேயாவது ஒரு தேவாலயத்தைக் கொள்ளை யிடப் போகிறாரா?' என்று நினைத்தேன்." அவள் தன் மகனின் புஜங்களை அணைத்துத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வாய் விட்டுச் சிரித்தாள். ஓ! எவ்வளவு திருட்டுத்தனம் உள்ளவர்கள், இவர் கள்? சொன்ன வேளையில் அவர் வந்தார். அவரிடம் நான் 'இதை வைத்துக் கொண்டு நீர் திருடினால், எனக் கும் அதற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கக் கூடாது' என்றேன், அவர் மெதுவாகச் சிரித்தார். பிறகு, 'இல்லை யில்லை. இது ஒரு சுவர்மீது ஏறுவதற்காகத்தான். நமக்கு முன்னால் ஒரு பெரிய சுவர் , இருக்கிறது. நாமோ பாபாத் துமாக்கள். பாபமோ - மறுபுறத்தில் இருக்கிறது-ம். புரிந்ததா?' என்றார். எனக்குப் புரிந்துவிட்டது. இரவில் பெண்களிடம் போவதற்கு அது . அவருக்குத் தேவைப் பட்டது. இருவரும் சிரித்தோம்” என்று கூறினாள். உனக்கும் சிரிக்கணும்னு தோணல்லெ என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டான் சிறுவன்: “சரி. அடுப்பைப் பத்தவையி” என்று தாயிடம் சொன்னான். ஆனால்-சர்க்கரை யில்லை யேடா” *போயி வாங்கிட்டு வா" “பணமும் இல்லையே எல்லாம் நீ மிடாக்குடி குடிக்கிறதாலேதான்...ம்... அவன் கிட்டே யிருந்து வாங்கிக்கோ" பையன் என் பக்கம் திரும்பினான், கேட்டான்: “பணம் வச்சிருக்கியா?” நான் பணம் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத் தேன். அவள் துள்ளி யெழுந்தாள். . அடுப்பின் மீது களிம்பேறி நெளிந்து கழிந்து போன அந்தப் பாத்தி ரத்தை எடுத்துக்கொண்டு, மூக்கால் முனகிக்கொண்டே, நடையைக் கடந்து மறைந்தாள். அம்மா” என்று அவள் மகன். கூப்பிட்டான்! ஜன் உலைக் கழுவி விடு. என்னாலே எதையும் பாக்க முடியலே, துள்ளி கழிந்து கால் மு