பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எல்ககாலாம்ப அரசும் பண்ட திவாக அந்தப் பொந்துக் குடிலுக்குள் மிதந்த தூசி படிந்து தெளிவுண்டாயிற்று. அவனுடைய தாயின் படுக்கைக்கு மேலாக ஒரு பாடாவதிக் கடிகாரம் தொங்கியது; ஒரு செப் புக் காசு அளவுள்ள அதன் பெண்டுலம் மெதுவாக அசைந்தாடியது. கணப்பருகே இருந்த பண்ட பாத்தி ரங்கள் அழுக்கடைந்திருந்தன. தூசும் தும்பும் அவை மீதும், மூலையிலே நூலாம்படைக் கூடு கட்டி வாழும் சிலந்தி ஊஞ்சல்களிலும் படிந்தன.. லெங்க்காவின் வீடு ஒரு குப்பைக் கிடங்கு மாதிரி இருந்தது; வறுமையின் அவலக்ஷணம் அந்த வீட்டில் எங்கணும் நிறைத்து, புலனை உறுத்திற்று, பாத்திரம் சூடேறிக் கொதித்து இரைந்தது; அதே வேளை' போ வெளியே" என்ற கடூரமான குரல் கேட் டது; இசை திடீரென நின்றது. “என்னை உட்கார வையி, அவுங்க அவனை விரட்டிட் டாங்க” என்று பெருமூச்சுடன் சொன்னான் லெங்க்கா. நான் அவனைப் பெட்டிமீது உட்காரவைத்தேன்; அவன் - தனது நெஞ்சுக்கூட்டைக் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டே இருமினான். "என் நெஞ்சு வலிக்குது. நல்ல காற்றை ரொம்ப நேரம் மூச்செடுத்தாலே எனக்குப் புடிக்காது. ம். சரி, நீ பேய் பிசாசுகளைப் பாத்திருக்கியா?-" “இல்லை " "நானும் இல்லை. ராத்திரி அடுப்பையே பாத்துக் கிட் டிருப்பேன். ஏதாச்சும் தலை காட்டுதான்னு--ஆனா அது வராது. இடு காட்டிலே யெல்லாம் பிசாசு உண்டுல்ல--?" உனக்கு எதற்கு அந்தக் கவலை? “வேணும், அது கேட்கவே ரசமாயிருக்கு. அதிலே ஒண்ணே ஒண்ணு அன்பு ஏற்பட்டு, நல்லதா மாறி விட்டா? தண்ணீர் வண்டிக்காரன் மகள் கட்கா ஒரு குட் டிப் பிசாசைப் பார்த்தாளாம். . உடனே பயந்துட்டா. கான்-? நான் இப்படிப் பட்டதையெல்லாம் கண்டு பயப் பட மாட்டேன்."