பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவன் ஒரு ஆபாசமான வார்த்தையால் அவளைத் திட்டினான். “அவள் ஒரு முட்டாள். ஒரு பூனையை மட்டும் அப் படி உணவு குடுத்து வளர்த்தா, அது ரொம்ப சீக்கிரத் திலே குதிரை மாதிரி வளர்ந்துடாது?" “ஆமாம். வளரும்!" “ஆனா, எங்கிட்டெ அவ்வளவுக்கு உணவு இல்லே! அதுக்கு நெறைய வேணுமே!' என்று கூறிவிட்டு, தனது கையை கெஞ்சோடு வைத்துத் தலையாட்டினான். "ஈயெல்லாம் நாய் மாதிரி வளந்திரும். விட்டில் பாச் சையெல்லாம் செங்கல்மாதிரி வளந்திரும்! அதுமட்டும் ஒரு குதிரை அளவு வளர்ந்துட்டா, அதுக்கு ரொம்பப் பலமாயிருக்குமில்லே” “ஆனால் அதற்கெல்லாம் மீசை இருக்கிறதே! இருந்தா ஒண்ணும் குத்தமில்லே. மீசை கடிவாளம் மாதிரி இருக்கும். ஹை-லகான். -சிலந்தி எப்படி வள ரும்? சிலந்தி ஒரு பூனைக்குட்டி தண்டி வளர்ந்துட்டா, பார்க்கப் பயமாயிருக்கு மில்லே. எனக்கு மட்டும் கால்கள் இருந்தா! வியாபாரம் பண்ணுவேன்! அம்மாவுக்குப் பச்சை வயல்களுக்கு மத்தியிலே ஒரு வீடு வாங்குவேன். * எப்பவாச்சும் பச்சை வயல்லே இருந்திருக்கியா?" “இருந்திருக்கிறேன்" “அதைப்பத்திச் சொல்லேன்-சொல்லுவியா?" நான் அவனுக்குப் பசும் புல். வெளிகளைப் பற்றியும், வயற்புறங்களைப் பற்றியும் சொன்னேன். குறுக்கே விழுந்து பேசாமல் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணிமைகள் கண்களின் மேல் மூடிப் பதிய, தூங்கி, வழி யும் முகம்போல் வாய் மெதுவாகத் திறந்திருக்க அவன் கேட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து, நான் - அமை தியுடன் கூறிக் கொண்டிருந்தேன். அவனுடைய தாய் கொதியேறிய சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டும் மறு கையில் ஒரு காகிதப் பொட்டலத்தை வைத்துக்