பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

“அப்படியானால் நான்-நான் மட்டும் பார்க்க வில்லையா?' “ஆமாமா, குடிச்சுக்கிட்டுக் கிடக்கிறப்போ" அவர்கள் இருவரும் சிறு குழந்தைகளைப்போல உற் சாகத்துடனும் தர்க்க ரீதியாகவும் வாதித்தார்கள். அச் சமயம் மாலை வெயில் வெளி முற்றத்தில் விழுந்தது. புறா நிறங் கொண்ட கனத்த மேகம் செக்கர் வானில் நிலைத்துத் தொங்கியது. பொந்துக் குடிலில் இருள் புகுந்துகொண் டிருந்தது. பையன் ஒரு கப் டீ குடித்தான்; வியர்த்தது. என்னை யும் தன் தாயையும் பார்த்துச் சொன்னான். நான் சாப்பிட்டாச்சு, நான் குடிச்சாச்சு, இப்போ -- எனக்குத் தூக்கமா வருது". சரி தூங்கப் போ” என்று சொன்னாள் தாய், "ம்.... அவன்-அவன் போயிருவான்---நீ போவப் போறியா?" “கவலைப்படாதே, அவரைப் போகாமல் நான் பார்த் துக் கொள்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவள் தன் முழங்கையால் என்னை இடித்தாள். "நீ போகவேண்டாம்” என்று வேண்டியவாறே கண் களை மூடிப் பெட்டிக்குள் - சாய்ந்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயிடம் கண்டிப்பான குரலில் சொன்னான். இவனை ஏன் நீ கலியாணம் பண்ணிக்கக்கூடாது? கலியாணம் பண்ணிக்கிட்டு, மத்த பொம்பளைகளைப்போல நீயும் ஏன் இருக்கக்கூடாது? . 'எல்லா மாதிரி ஜனங்கள் கிட்டேயும் ஏன் பழகுறே? அவங்க உன்னை அடிக்கத் தானே செய்தாங்க. ஆனா, இவன்--இவன் ரொம்ப நல்லவன்" "உஷ், உறங்கு' என்று மெதுவாகக் கூறிவிட்டு, அவள் தன் கையிலிருந்த டீ கப்பில் தனது முகத்தைக் கவிழ்த்தாள்.