பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

55 "இல்லை, இன்னொருத்தர் வியாபாரம், நான் வேலை செய்கிறேன்." | அவள் என்னை பெருங்கி வந்தாள். ஐயோ- என்னைப் பார்த்து முகத்தைத் திருப்ப வேண்டாம். அந்த வாடையே இனி அடிக்காது. தெரிவி லுள்ள யாரையும் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத் தெரியும்” என்றாள். "நான் ஒன்றும் முகத்தைத் திருப்பவில்லையே!" வேலை செய்து மரத்துத் தொய்ந்து போய், நகம் தேய்ந்த விரல்களை என் மடியில் போட்டுக் கொண்டே அவள் சொன்னாள்:

  • லெங்க்காவின் சார்பில் உங்களுக்கு நான் நன்றி கூறவேண்டும். அவனுக்கு இன்று இன்பப் பொழுதாகக் கழிந்தது. எல்லாம் உங்களால் தான்.”

“சரி நான் போக வேண்டும்' என்றேன். "எங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். வேலை இருக்கிறது. “இருங்களேன்" இல்லை. முடிப்பார்த்தாள் மெதுவாக்கக் குட்க்கு நான் அவள் மகனைப் பார்த்தாள்: ஜன்னலைப் பார்த்தாள். வானைப் பார்த்தாள். பிறகு மெதுவாகச் சொன்னாள்: “தங்குங்கள், நான் எனது ஜாடியைக் கைக் குட்டையால் மூடிவிடுகிறேன், என் மகன் சார்பில் உங்களுக்கு நான் வந்தனம் கூற வேண்டுமல்லவா?" அவள் ஆணித்தரமாக, அன்பாக இதய நெகிழ்ச்சி யோடு பேசினாள். அவளுடைய கண்கள், பயங்கர முகத் தில் அமைந்த பச்சிளம் கண்கள் புன்னகையோடு பிர காசித்தன. பிச்சைக்காரியின் புன்னகையல்ல; ஈன்றி யறிதலை நல்ல வழியில் காட்டும் செல்வந்தனின் புன்னகை அது.