பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவப்பன் ஓல்கா நதிக் கரையில் அமைந்த ஒரு நகரத்தின் விபச்சார விடுதி யொன்றில் வாஸ்கா என்ற நாற்பதுவயது மனிதன் வேலை பார்த்து வந்தான்; அவனுக்கு 'சிவப்பன்' என்ற பட்டப் பெயரும் உண்டு. சுனத்துத் தோன்றும் அவனது முகத்தின் பச்சை மாமிச நிறமும்; ஒளி நிறைந்த செம்பட்டைச் சிகையுமே, இந்தப் பட்டப் பெயருக்குக் காரணங்கள். | தடித்த உதடுகள்; சருவச் சட்டியின் கைப்பிடியைப் போல, கபால மூலத்திலிருந்து துருத்தி நிற்கும். பெரிய காதுகள்; ஒளியற்ற தன் சிறு கண்களில் கொடூர பாவம் தெறிக்க, அவன் பிறரைப் பார்க்கும் பார்வை; தடித்து மதமதர்த்த உடற்கட்டு அவலுக்கு இருந்த போதிலும் சதைக்குள் புதைந்து பனிக்கட்டித் துண்டுகள் போல் ஒளிரும் அந்தக் கண்களில் அகோரப் பசிவேட்கையே தென்பட்டுக் கொண்டிருக்கும். குள்ளமும் குண்டுமா யிருந்த வாஸ்கா, நீலகிற கோசாக்' கோட்டும், அகன்ற கம்பளிக் கால்சராயும், மெல்லிய கோடிட்ட, பூட்ஸுகளும் மாட்டியிருந்தான். அவனுடைய செம்பட்டைத் தலைமயிர் சுருள் சுருளாக வளர்ந்திருந்தது. அவன் தொப்பி வைத் துக்கொண்டால், அவை தொப்பி யோரங்களில் சுருண் டெழுந்து, சிவப்புப் பூக்கள் போல அழகு காட்டிக்கொண் டிருக்கும்.. அவனுடைய தோழர்கள் அவனை 'சிவப்பன்' என்று அழைத்தார்கள்; அங்குள்ள பெண்கள் அவனைக் கொலை காரன்' என்று அழைத்தார்கள். காரணம், அவன் அவர் களைச் சித்திரவகை செய்ய விரும்புவான். அந்த நகரில் பல வகைப் படிப்புப் பெற்றவர்களின் கழகங்கள் பல உண்டு; வாலிபர்களும் அதிகம். எனவே, அந்த வட்டாரம் முழு வதிலும் பல விபச்சார விடுதிகள் தெருத் தெருவாக,