பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

59 கணம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவன் வாய்விட்டு அழைப்பான்: 'மாஸ்கா, வா இங்கே "வாளிலி மிரோனிச், என்னைத் தொடாதே. தொட் டால், நான் என் தொண்டையை நெரித்து விடுவேன்... என்று அந்தப் பெண் , சமயங்களில் அழுத்தமாகவும் கண்டிப்பாகவும் சொல்லுவாள், "சீ, முட்டாள்! வா இங்கே. உனக்கு நானே கயிறு தருகிறேன்.” வாஸ்கா கொஞ்சங்கூடத் தயக்கமே இல்லாது. சொல்லுவான். குற்றவாளிகள் தாமாகவே தன்னிடம் வர வேண்டும் என்பது அவன் விருப்பம். 'நான் உதவி கோரிக் கூச்சலிடுவேன்! 'ஜன்னல்களை உடைத்தெறிவேன்.". அந்தப் பெண் பயத்தால் தொண்டை யடைக்க, தான் செய்ய வேண்டியவற்றை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாள். “ஜன்னலை மாத்திரம் உடை, பார்ப்போம், உடைந்த கண்ணாடி முழுவதையும் உன்னையே தின்ன வைக்கிறேன்" என்பான் வாஸ்கா, பல தடவைகளில், அந்தப் பெண்ணே தனது பிடி வாதத்தைக் கைவிட்டு அந்தக் 'கொலைகாரனை' நெருங்கு. வாள். அவள் வர மறுத்தால், வாஸ்காவே அவளிடம் நெருங்கிச் சென்று அவள் தலைமயிரைப் பற்றிப் பிடித் திழுத்து, தரையில் மோதி யெறிவான். அவளைப் போலவே மன உணர்ச்சி பெற்ற அவளுடைய தோழிகளே அவள் டைய கையையும் காலையும் கட்டி, அசைய வொட்டாது செய்ய, அந்தத் தோழியரின் கண் முன்னாலேயே', குற்ற வாளி சமையல் கட்டிலேயே உருட்டித் தள்ளப்பட்டு தண் டனையை அனுபவிப்பாள். - அந்தப் பெண் மட்டும் உணர்ச்சி ஆவேசமுள்ளவளாயிருந்து, . எதிர்த்துக் குற் றம் சாட்டுவதா யிருந்தால், தோலைப் பிய்த்தெறிந்து தடித்துப் போகாத வண்ணம் செய்யும் ஈரத் துணியால் சுற்றப்பட்ட பலத்த தோல்வாரால் விளாசப் படுவான்