பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

61 உதாரணமாக, அந்த விடுதிகளில் ஒன்றிலிருந்த வீரா கோப்டெவா என்ற பெண்ணின் கதையைப் பார்க்க லார், வந்திருந்த விருந்தாளியிடமிருந்து ஐயாயிரம் ரூபிள் களைத் திருடி விட்டதாக அவள் மீது சந்தேகம். சைபீரிய வியாபாரியான அந்த விருந்தாளி, தான் வீராவின் அறையில் வீராவுடனும், ஸாராஷெர்மான் என்ற இன் னொரு ஜோடியுடனும் இருந்ததாகப் போலீஸில் தாக்கல் செய்தான். அன்றிரவு ஒருமணி நேர காலத்துக்குப் பின் ஸாரா போய் விட்டதாகவும், மீதிப் பொழுதையும் தான் வீராவுடனேயே கழித்ததாகவும், அவளை வீட்டுப் பிரிந்த நேரத்தில், தான் குடிவெறியில் இருந்ததாகவும் பிராது பண்ணினான். வழக்கு தன் போக்கில் சென்றது. விசாரணை கடந்து கொண்டேயிருந்தது. பிரதிவாதிகள் இருவரும் ஜெயிலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். முடிவில் தக்க சாட்சிய மில்லாததால், கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்தப் பெண்கள் தங்கள் எ ஐமானியிடம் திரும்பி வந்ததும், இன்னொரு விசாரணை ஆரம்பமாயிற்று. எஐ மானி அவர்கள் தான் திருடினார்கள் என்பதில் நிச்சய புத்தி யுடனிருந்ததால், - தனக்குரிய பங்கைக் கொடுக்கும்படி கேட்டாள், தனக்கும் அந்தத் திருட்டுக்கும் எந்த விதச் சம்பந்த மும் கிடையாது என்பதை நிரூபிப்பதில் ஸாரா வெற்றி பெற்று விட்டாள். ஆகவே, எஜமானி வீராவைப் பரி சீலனை செய்ய ஆரம்பித்தாள்.. வீராவைக் குளிக்கும். அறையில் அடைத்து வைத்து, உப்பு அதிகம் சேர்ந்த உப்புமாவையே உணவாகக் கொடுத்து வந்தாள். எனி னும், அந்தப் பெண், தான் பணத்தை ஒளித்து வைத்திருக் கும் இடத்தைச் சொல்பவளாய்க் காணோம். ஆகவே, எஜமானி வாஸ்காவின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பணம் இருக்குமிடத்தை , மட் டும் அவன் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால், நூலு ரூபிள்கள் இனாம் தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது.