பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$5 பொம்மையின் உருவம் விருந்தாளிக்கு அவளிடம் பேச வேண்டும் என் றிருந்த உணர்ச்சியையும் கொன்றுவிடும். ஆகவே அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார். “வா." அவளும் உடம்பை ஆட்டி அசைத்து நடைபழகி, அர்த்தமற்ற புன்னகை செய்து கொண்டு கண்களை இட மும் வலமும் உருட்டி விழித்தவாறே அவருடன் செல் வாள். இதெல்லாம் விடுதித் தலைவியால் அவளுக்குக் கற்றுத்தரப்பட்ட சாகசங்கள். இதற்கு 'அதிதீயை ஆகர் ஷிப்பது' என்று பெயர். அதிதியை ஆகர்ஷிக்கும் இக் தக் கண்வெட்டு எல்லாம், நன்றாக உடை உடுத்தியவுனேயே வந்துவிடும். பிறகு அவள் தனிமையிலிருந்தா லும், பிற பெண்களுட னிருந்தாலும், அதிதியடனிருந்தா லும் . அந்தக் கண்கள் மட்டும் அர்த்தமற்று உருண்டு கொண்டே இருக்கும். அவளிடம் இன்னொரு விபரீதச் செய்கையும் உண்டு, தனது நீண்ட ஜடையை கழுத்தைச் சுற்றிப் போட்டு, ஜடை முனை மார்பின் மேல் தொங்க, அதைத் தனது கை யால் பிடித்து, ஏதோ சுறுக்குக் கயிற்றைத் தாங்கும் பாவனையில் நிற்பாள். மேலும் அவள் தன்னைப் பற்றியே அதிகம் சொல்லிக் கொள்வாள். தன் பெயர் அக்சின்யா காலு ஜீனா என்றும், தான் ரைய்ஜான் மாகாணத்தைச் சேர்ந்தவள் என்றும், ஒரு தடவை பெட்காவுடன் ‘பாபகிரியை செய்ததால், ஒரு குழந்தைக்குத் தாயானாள் என்றும், அதன் பின் ஒரு ஆப் காரி உத்தியோகஸ்தரின் குடும்பத்தோடு நகருக்கு வந் தாள் என்றும், வந்த இடத்தில் செவிலித் தாயாக வேலை பார்த்தாள் என்றும், பிறகு தன் குழந்தை இறந்து போகவே, வேலையிலிருந்து விலக்கப்பட்டு, இந்த விடுதி யில் வேலை பார்க்க' வந்ததாயும், வந்து நாலு வருஷ காலம் ஆகிறதென்றும் தெரிவிப்பாள், "இந்த இடம் பிடித்திருக்கிறதா?" என்று அதிதியிட மீருந்து கேள்வீ பிறக்கும். 'துது