பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

67 தொடர்ந்து உணர்ச்சியற்ற குரலில் அவ்னுடைய ஆணைக் குரலும் கேட்கும், “'ஹி-உன்னைத்தானே! - முட்டாள் தனமாய் நடக் காதே "கொலைகாரா! பூதமே!” என்று அந்தப் பெண் கத்து. வாள், "என்னை எப்படி நீ மரியாதைக் குறைவாய்ப் பேச லாம்? பாருங்கள், மிஸ்டர்! பாருங்கள்- அவன் எப்படி என் முதுகைச் சவுக்கினால் அடித்திருக்கிறான்!--* என்று கூறிக்கொண்டே, தனது ரவிக்கையைக் கிழித்துக் காட்ட முயல்வாள், வாஸ்கா நேராக அவளிடம் சென்று அவளைக் கையோடு பிடித்திழுத்து ஸ்திரமான பயங்கரக் குரலில் கண்டித்துக் கூறுவான் : "ம், சத்தம் போடாதே, உஷ்!- என்ன உளறுகிறாய்! குடித்திருக்கிறாயா? பார் இப்போ ." இந்தக் கண்டிப்பே அவளுக்குப் போதும்; அந்தப் பெண்ணை வெளியில் இழுத்துக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் சில சமயங்களில் தான் ஏற்படும். பல பெண்கள் அவனுடைய வைப்பாட்டிகளாக இருந்த போதிலும், எவளும் அவனிடமிருந்து ஒரு அன் பான வார்த்தையைக் கேட்டதில்லை. அவனாகவே அவர் களை நாடிச் செல்வான். . எவளாவது அவனுடைய இஷ் டத்தைப் புரிந்து கொண்டால், உடனே சொல்வான் ;' “இன் றீவு உன்னோடு தங்கப் போகிறேன்.” அன்று முதல் கொஞ்ச காலத்துக்கு அந்தப் பெண் ணிடமே போய் வந்து கொண்டிருப்பான்; திடீரென்று எந்த விதப். பேச்சு வார்த்தையு மில்லாமல் பிரிந்தும் போய் விடுவான். பிசாசுப் பயல்! அவன் உடம்பு கட்டையால் ஆனது தான்!' என்று பெண்கள் அவனைப் பற்றிப் பேசிக் கொள் வார்கள். அவன் வேலை பார்த்து வந்த விடுதிப் பெண்கள் ஒவ் வொருவரோடும் அவன் வரிசைக் கிரமமாகப் பழகிப்