பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பார்த்திருக்கிறான் : அக்சின்யாவுடனுந்தான், அவளோடு வாழ்ந்துவரும் காலத்தில் தான் ஒரு தடவை அவளைப் பல மாகக் கொடுமைக்கு ஆளாக்கினான், சோம்பலும் சுகாரோக்கியமும் கொண்டவளாதலால், அரவளுக்குத் தூக்கத்தில் பரம பிரீதி. வீட்டில் எவ்வளவு சப்தமிருந்தாலுங்கூட அவள் அசைவற்றுத் தூங்குவாள். எங்கேனும் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு, 'அதி தியை ஆகர்ஷிக்கும்' கண்வெட்டுக் கருமத்தைக் கூட மறந்து போய் விடுவாள். அதிதிகள் வேறு எங்கேனும் கவனம் செலுத்தும் போது, அவளுடைய கண்ணிமைகள் குவித்து மூடும்; உதடுகள் பிரிந்து, வெள்ளிய பெரும் பற் கன் வெளித்தெரியும். குறட்டையும் வரும், குறட்டைச் சபதம் கேட்ட மற்றப் பெண்களும் அதிதிகளும் வாய் வீட்டுச் சிரிப்பார்கள்; அந்தச் சிரிப்புங்கூட அவளை எழுப் இது பல முறை நடந்தது. விடுதித் தலைவி அவளை முகத்தில் அறைந்தும் கண்டித்தாள். எனினும் - அவள் தாக்கம் பயந்து ஒதுங்கி விடவில்லை. கொஞ்ச நேரம் அழு வாள்; பிறகு தூங்கிப் போய் விடுவாள். கடைசியாய் இந்த விஷயம் வாஸ்காவிடம் வந்து சேர்ந்தது. ஒரு நாள் இரவு அவள் அதிதியின் பக்கத் திவிருந்த சோபாவில் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்; அதிதியும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். வாஸ்கா உள்ளே சென்று, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவளைக் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான். "$ என்னை அடிக்கத்தான் போகிறாயா?" என்று அக்சின்னா கேட்டாள். "அப்படித்தான்” என்றான் வாஸ்கா. அவர்கள் சமயலறையை அடைந்ததும், அவன் அவளுடைய ஆடைகளைக் களையச் சொன்னான். - என்னை அதிகமாய் அடிக்காதே” என்று இரங்கி வேண்டிக் கொண்டாள்.