பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"ம்...சீக்கிரம்-கழற்று -கழற்று !" அவள் ரவிக்கை வரையிலும் களைந்து விட்டாள், "அதையும் கழற்று” என்று வாஸ்கா உத்தர விட்டான். "என்ன படுபோக்கிரித்தனம்!” என்று பெருமூச் செறிந்து கொண்டே, ரவிக்கையையும் கழற்றினாள், வாஸ்கா அவளுடைய தோள்பட்டையில் சவுக்கால் அறைந்தான். போ-முற்றத்துக்குப் போ.” "என்ன சொல்கிறாய்?- இது குளிர்காலம். எனக்குக் குளிருமே!" அவன் அவளைச் சமையல் கட்டிலிருந்து இவளியே தள்ளிக்கொண்டு போனான்; சவுக்கால் கட்டி இழுத்துக் கொண்டு போனான். முற்றத்தில் கிடந்த பனிக் கட்டித் குவியலின் மேல் அவளை மல்லாந்து படுக்கச் சொன்னான். “வாஸ்கா! எப்படி நீ என்னை ...” “படு- போய்ப் படு!"> அவன் அவளைக் கீழே தள்ளி, அவள் முகத்தைப் பனிக்குள் புதைத்தான். அவளுடைய கூக்குரல்கூட வெளியே கேட்கவில்லை. பிறகு வெகு நேரம் அவளைச் சவுக்கால் அறைந்து கொண்டே, கத்தினான், “இனிமேல் தூங்காதே-தூங்காதே--தூங்காதே.... - அவன் அவளை விடுவித்த பிறகு, அவள் கண்ணி சொரிந்து கொண்டு விக்கி விக்கிச் சொன்னாள்! “வாஸ்கா காத்திரு! உனக்கும் காலம் வரும்! நீயும் ஒரு கான் அழு: வாய். கடவுள் ஒருவர் இருக்கிறார், வாஸ்கர' .. "பேசு பேசு. இனிமேல் நீ தூங்கு ! உன்னை வெளியே கொண்டு வந்து சவுக்கடியும் கொடுத்து, தண்ணீரையும் மேலே ஊற்றுகிறேன்” என்றான். வாழ்க்கைக்கும் அதற்குரிய புத்தி சாதுரியம். உண்டு; அதன் பெயரே 'விபத்து!' சமயங்களில் அது நமக்குப் பரி