பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வசதி கிட்டிய காலத்திலும்--தப்பி ஓடாது, அந்த சங்கீத சுகத்திலே மெய் மறந்து விடுகிறான் என்பதைக் காண்கிறோம். மொத்தத்தில் இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்திலும் நாம் காணுகின்ற உண்மை இதுதான். ஆபாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள விடச்சாரி, ‘ரௌடி'த் தொழிலில் ஈடுபட்டுள்ள : முரடன், தண் டனையை எதிர்நோக்கி நிற்கும் கைதி, முதலிய அத்தனை பாத்திரங்களிடத்திலும் அதாவது. இன்றைய , சமூகம் “பொல்லாதவர்கள்' 'இழிஜனங்கள்' என்று ஒதுக்கித் தள்ளும் அத்தனை கதாபாத்திரங்களி...த்திலும், எப்படி மனிதத் தன்மையின் தூய்மையும் புனிதத்துவமும் குடி கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து அனு பவிக்கிறோம்.' மேலும் இந்தத் தொகுதியின் ஆசார வாசலாக உள்ள "எப்படி எழுதினேன்?" என்ற கட்டுரை - கார்க்கி. . இந்த மனிதத் தன்மையை எப்படி உணர்ந்தார் என்பதை உங்களுக்கு நன்கு விளக்கும். முற்போக்கு இலக்கியம் சிருஷ்டிக்க விரும்புபவர் களுக்கு இந்தக் கதைகள் ஒரு முன் மாதிரி; முற்போக்கு இலக்கியத்தைப் பிரச்சார இலக்கியம்' என்று குறை கூறும் இலக்கிய சனாதனிகளுக்கு இந்தத் தொகுதி ஒரு பதில்; எச்சரிக்கை ! ரகுநாதன்