பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாஸ்கா தலையை ஆட்டிக்கொண்டே கரகரத்த குர லில் சொன்னான் : . "நான் விழுந்து...” "இவன் ஒரு ட்ராலி. வண்டியிலிருந்து விழுந்துவிட் டான்” என்றான் போலீஸ்காரன். “விழுந்தான். விழுந்தவுடன் அவன் கால் பைதா வுக்குள் அகப்பட்டுக் கொண்டது ! 'முறிந்தது -- அவ் வளவுதான்." அந்தப் பெண்கள் அமைதியோடிருந்தாலும், அவர் கள் கண்கள் மட்டும் நெருப்புக்கனல் மாதிரி கனிந்து நின்ற ன. அவர்கள் வாஸ்காவைத் தூக்கி மேல் மாடியில் ஒரு அறைக்குக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார்கள்; டாக் டருக்குச் - சொல்லியனுப்பினார்கள். அந்தப் பெண்கள் அவனுடைய படுக்கையைச் சுற்றி நின்று பார்வை பரிமா றினர்; வார்த்தை பரிமாறவில்லை. போங்கள் வெளியே" என்று வாஸ்கா சத்த மிட்டான். எவளும் அசையவில்லை, "ஆ! உங்களுக்குச் சந்தோஷமாயிருக்கிறதா?" “நாங்கள் உனக்காக அழமாட்டோம். என்று வீடா சிலுப்பிக்கொண்டே சொன்னாள், . “அம்மா, இவர்களை வெளியே விரட்டு... இவர்கள் எதற்காக இங்கு வரவேண்டும்?" "பயமாயிருக்கிறதா? என்று அவன் மீது குனிந்து கொண்டு கேட்டாள் லீடா.. “போங்கள்-கீழே போங்கள்" என்று தலைவி ஆணை விட்டாள். அவர்கள் சென்றனர். போகும்போது ஒவ்வொருத்தி யும் அவனைப் பார்த்தாள். விடா மட்டும். மெல்லச் சொன்னாள் :