பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 கம் எனக்குப் கப்பட்ட இனத் - கரங்கள் திரும்பவும் வருவோம்.” அக்சின்யா முஷ்டியை உயர்த்தி அவனைப் பயமுறுத் திக்கொண்டே சொன்னாள் பிசாசுப் பயலே!...நொண்டி யாணயார் வேணும் உனக்கு!” அவளுடைய துணிச்சல் பிற பெண்களைப் பிரமிக்கச் செய்தது. ேேழ சென்ற அந்தப் பெண்களின் உள்ளத் தில் இதற்கு முன் அனுபவித்திராத ஆனந்தமான இனி மையும், பழி வாங்கியதனால் ஏற்பட்ட பெருமிதமும் நிரம் - பித் தலும்பின, ஆனந்தப் பைத்தியத்தில் வாஸ்காவைக் கேவி செய்வதும் விடுதித் தலைவியை விறைத்துப் பார்ப் பழம் புண் படுத்துவதுமாக இருந்தனர், அவர்கள். விடுதித் தலைவியுங்கூட வாஸ்கா விதியின் வலிமை பால் - தண்டிக்கப்பெற்றதற்காகச் சந்தோஷப்பட்டாள். தான் அவளிடம் வேலை பார்ப்பவன் என்பதை வாஸ்கா மதத்து, 'தானே உயர்ந்தவன், தனக்குத் தாழ்ந்தவளே அவன்' என்ற மனப்பான்மையோடு பழகி வந்ததால், அவன் அவனுக்கு அடங்கி நடந்து வரவேண்டியிருந்தது. ஆனால், அவனுடைய உதவியின்றி அந்தப் பெண்களைக் கட்டி மேய்க்க முடியாதென்பதை அவள் உணர்ந்ததனால் வாஸ்காவைப் பற்றிய தன் மன உணர்ச்சிகளை வெளி விடாதிருந்தாள். டாக்டர் வந்தார்;. நோயாளிக்குக் கட்டுக் கட்டினார். மருந்தெழுதிக் கொடுத்தார். பிறகு, வாஸ்காவை ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைப்பது தான் உசிதம் என்று தலவியிடம் கூறிவிட்டுப் போய்விட்டார். "நல்லது தோழிகளே. நமது அருமை நோயாளியை இன்னொரு தரம் போய்ப் பார்க்கலாமா?” என்று துணர்ச் சல் நிறைந்த குரலில் கேட்டாள் லிடா. அவர்கள் அனை வரும் - கூச்சலுடனும், கும்மாளியுட னும் மாடிக்கு விரைந்தனர். வாஸ்கா கண்களை மூடிக் கிடந்தான்; கண்களைத் திறக்காமலேயே, அவன் சொன்னான். - ' திரும்பவும் வந்து விட்டீர்களா?”