பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாலு நாட்கள் கழிந்தன. விடுதித் தலைவி வாஸ் காலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று அரும்பாடுபட்டாள்; எனினும் ஆஸ்பத்திரியில் அந்தச் சமயம் கட்டில் காலியில்லை. ஒரு நாள் மாலை இருள் சூழும் நேரத்தில் வாஸ்க் தலையை உயர்த்திக் கேட்டான்: அக்சின்யா, நீ அங்கேயா: இருக்கிறாய்? அவள் தூங்க வழிந்து கொண்டிருந்த போதிலும், அந்தக் கேள்வி அவளை எழுப்பி விட்டது. பின் நான் எங்கே யிருக்க வேண்டும்? என்று கேட்டாள்.

  • இங்கே வா."

அவள் அவனுடைய படுக்கையருகே சென்று, வழக்கம் போல், தனது ஜடையைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் - கை விரலால் தாங்கி நின்றாள், உனக்கு என்ன வேணும்?” - "ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு, இப்படி உட்கார்" பெருமூச்சுடன் அவள் ஜன்னலருகே சென்று அங்கு கிடந்த நாற்காலியை எடுத்து வந்து போட்டு உட்கார் தாள், “சரிதானா?" ஒன்றுமில்லை ..... நான்......கொஞ்சம் இங்கேயே இரேன்" சுவரில் வாஸ்காவின் - வெள்ளிக் கடிகாரம் டிக்டிக் கென்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியில் ஒரு பனிப் பாதை வண்டி மூவி ஓடுவதும், அதிலுள்ளவர்கள் சத்த மிடுவதும் கேட்டது. கீழ் வீட்டில் பெண்கள் சிரிப்பதும், யாரோ ஒருத்தி உச்சஸ்தாயியில் உரக்கப் பாடுவதும் கேட்டன: | "மாணவன் ஒருவன் - என் மனசைக் கொள்ளை கொண்டான்......”