பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

“ ஏன்? அப்படித்தான் இருக்க முடியும்! " உண்மையாகவா ?” " ஆமாம் அப்படித்தான். நீ விரும்பினால், நரமிகு வரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்." “ என்...ன?" அசட்டுத்தனமாய் விழித்துக்கொண்டே கேட்டாள் அக்சின்யா, நாம் மணம் புரிந்து கொள்வோம்' என்று உணர்ச்சி யுடன் சொன்னான், வாஸ்கா, “ நீயும் நானுமா?" ஆமாம்." அக்சின்யா வாய்விட்டுச் சிரித்தான். தனது நாற்காலி யில் மேலும் கீழும் ஆடிச் சிரித்துக் கொண்டு, தனது வயிற் றைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் சிரித்தாள்; அது அவளிடம் அசாதாரணமாகத் தோன்றிய சிரிப்பு - ' உனக்கு என்ன நேர்ந்து விட்டது ? என்று வாஸ்கா கேட்டான். மீண்டும் அந்தப் பசி அவன் கண் களில் குடி கொண்டது. அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள். என்ன விஷயம்?" என்று அவன் மீண்டும் கேட் டான். முடிவாக, அவள் தனது கூச்சலுக்கும் சிரிப்புக்கும் இடையே எப்படியோ சொல்ல ஆரம்பித்தாள்; " எல்லாம் கல்யாணத்தைப் பற்றித்தான், அது நம் மிருவருக்கும் ஒத்து வருமா, என்ன? நான் தேவாலயத் துக்குச் சென்றே வருஷம் மூன்றுக்கு மேலாகிறதே! என்ன விபரீத ஆசாமியப்பா, 57 நானா, உன் மனைவி?... உன்னைக் கட்டிக் கொண்டு, உனக்குப் பிள்ளைகளும் பெற்றுத் தரவேண்டு மென்ற எதிர்பார்க்கியை 1... திஹா, ஹா."