பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேச்சு முறிந்தது; அவன் தனது கையால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். பிறகு குரலிலே ஆவலும், கண் களிலே பயமும் தோன்ற மீண்டும் பேச ஆரம்பித்தான்: அதைப் பிரமாதப் படுத்துகிறாய். தீமை--அது ஒன்றுதானா உன்னுடைய குற்றச்சாட்டு?. ஆ! என்னிட மிருந்து அவர்கள் வேறு எதைத்தான் விரும்பினார்கள்? அக்சின்யா என்னோடு வரமாட்டாயா?” மீண்டும் அதைப்பற்றி வாய் பேசாதே. என்னால் முடியாது" என்று அக்சின்யா திடமாகச் சொல்லிவிட்டு, சந்தேக நோக்குடன் அவனை வீட்டு விலகினாள். அவர்கள் பேச்சு 'மீண்டும் நின்றது. சந்திர் ஒளி அறைக்குள் பிரகாசித்தது; அதன் ஒளியில் வாஸ்காவின் முகம் பசந்து போயிருந்தது. வெகுநேரம் அவன் கண் களத் திறந்தவாறே' இடந்துவிட்டு, மீண்டும் கண் களை மூடினான், கீழ் வீட்டிலோ கூத்து, கும்மாளம், பாட்டுக்கள்...... அக்கின்யா குறட்டைவிட ஆரம்பித்து விட்டாள்; வாஸ்கா ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். இரண்டு நாட்கள் கழிந்தன. விடுதித் தலைவி ஆஸ் பத்திரியில் வாஸ்காவுக்கு இடந்தேடி விட்டாள். ஒரு ஆம்புலன்ஸ் காரில் உதவி டாக்டரும், ஆஸ்பத் திரிச் சேவகனும் வந்தார்கள். அவனை மெதுவாக, கீழ் வீட்டுக்கு இறக்கி, சமையலறைப் பக்கம் கொண்டு வந்த தனர். அங்கு எல்லாப் பெண்களும் வாசல் நடையில் குழுமி நிற்பதை அவன் கண்டான். அவனுடைய முகம் சுருங் கிற்று; எதுவும் பேசவில்லை. அவர்கள் அவனை ஆர்வத்துட னும் அமைதியுடனும் கூர்ந்து தோக்கினர். அந்தப் பார்வை யிலிருந்து எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லை. அக்சின் யாவும் விடுதித் தலைவியும் அவனுக்குக் கோட்டை மாட்டி விட்டார்கள், சமையல் கட்டில் பரிபூரண சவ அமைதி நிலவிற்று. “வருகிறேன்” என்று எல்லாப் பெண்களுக்கும் தலை தாழ்த்திச் சொன்னான் வாஸ்கா: "வருகிறேன்..."