பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்கீதம் ங்குத்தான ), ஒரு இனக்கும் ஒரு திற்கும் நான் அந்தப் போலீஸ் படையின் அதிகாரியின் தனி யறையில் உட்கார்ந்திருந்தேன்; அது ஒரு சின்ன அறை; ஒளியும் களையும் அற்ற - அறை, அந்த அறையில் ஒரு அகலமான எழுத்து வேலைக்கான மேஜை, காயதோல் பிடி போட்ட மூன்று நாற்காலிகள், ஒரு சோபா, ஒரு பெரிய அரங்கு பீரோ முதவியன இருந்தன. அந்த அறையிலே தொங்கிக் கொண்டிருந்த அமிதமான புகைப்படங்களின் தொகையால், அந்த அறையின் களையின்மை அதிகம் பட்டுத் தோன்றியது, அந்தப் படங்கள் ஏராளம். போலீஸ் படைகள், பெண் கள், பிள்ளைகள், ஏதோ ஒரு ராணுவ முகாமின் படம், ஒரு செங்குத்தான நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் (எனக்குத் தெரியாதது), ஒரு இளம் ராணுவ மாணவன் "கடிவாளத்தைப் . பிடித்தவாறு நிற்கும் ஒரு வெள்ளைக் குதிரை, ஊசியிலைக் காட்டில் கோணல் மாணலாக சீற்கும் ஒரு கற்சிலையைப்போல் உள்ள ஒரு பாதிரியின் முழு உருவப் படம்-இத்தியாதி. அந்த அதிகாரி உயரமானவர்; - திரண்டு உருண்ட புஜங்களை உடையவர். அவர் ஒரு காக்கி சிறச் சட்டை அணிந்திருந்தார். அவரது முகம் தெளிவாகவும் தேய்ந்து மெலிந்ததாகவும் இருந்தது. அவரது பழுப்பும் நீலமும் கலந்த கண்கள் பெரிதாகவும் அழகாகவும் இருந்தன. எனி னும். அவற்றின் பார்வையில் களைப்பும் சோர்வும் சோக மும் பிரதிபலித்தது. அவருக்கு வயது ஒன்றும் நாற்பதுக்கு மேலிருக்காது. எனினும் அவரது தாடி பழுத்து நிற மாறிவிட்டது. அலைபோற் சுருண்ட அவரது. தலைமயிர் மெல்லியதாக இருந்தது. அவரது. இடது கன்னத்தின் பக்கம் அடிக்கடி , ஒரு நரம்பு - வூலித்து இழுத்துக் கொள்வதால், அவர் அடிக்கடி கண்களை , இமை தட்டி விழித்தார்.