பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என் முன் எதிரி எவனுமில்லை; இந்த எச்சுப்போன மனிதனிடம் எந்தத் துன்மார்க்கமும் தென்படவில்லை. இதுபோன்ற ஒரு நன்னாளில் அவரைப் போன்ற ஆசாமி ஊரைவிட்டு வெளிச்சென்று காட்டுப் புறத்தில் இளம் பசிய புல் தரையில் மல்லாந்து படுத்து வானை நோக்கிக் களிப்புறத்தான் வேண்டும்; ஆனால் இவரோ இந்த அறைக் குள்ளே கிடந்து புழுங்கி, தமது காலத்தை என்னோடு வீணாக்கிக்கொண்டு, திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி களையே கேட்டுச் சலிப்புறச் செய்து கொண்டிருந்தார். “நீ ஏன் யாரோஸ்லாவுக்குப் போனாய்?" "அதைத்தான் சொன்னேனே - “நீ - சொல்வதை நம்பமுடியாது" என்று பதிலளித் தார்; தனது சிகரெட் சாம்பலை உதறித் தட்டினார்; அவரது கால் செருப்புக்களை மீண்டும் தரையோடு தட்டித் தான் மிட்டுக் கொண்டார். அவர் தம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தை யும் ஏதோ ஒரு அதிசயக் கண்ணோட்டத்தோடு பார்த்தார்; அந்த அறையிலுள்ள சாமான்கள் எல்லாம் அவருக்கே புதிதானவையா யிருப்பதுபோல அவர் பார்த்தார்; அந்தச் சாமான்கள். தமக்குப் பிடிக்காதது போலவும் தமக்குத் தேவையானவை அங்கு இல்லாதது போலவும் கருதும் ஒரு பாவம் அந்தப் பார்வையில் தென்பட்டது. சமயங்களில் எதுவுமே பேசாமல் தலையை மட்டும் பலமாக ஆட்டிக் கொண்டார். அப்படி ஆட்டும்போது அவரது இளந்தாடிவிசிறியைப்போல் அசைந்தாடி மார்பின் மீது வீசிக்கொண் டது. கலைக்கப்பட்ட தன் கூட்டைச் சுற்றிச் சுற்றிப் பறக் கும் ஒரு ஊசி இலைக்காட்டுப் பறவையைப் போல் அவர் தோற்றமளித்தார். என் வாழ்க்கையிலேயே. இந்த மாதிரி ஆசாமியை நான் இப்போது தான் சந்தித்தேன்; அதை நினைத்தால்... அவரைப் போன்ற ஆசாமி இந்த உலகத்திலேயே அவர் ஒரே ஒருவர் தான் இருக்க முடியும் என்று எனக்குப்