பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 கேள்!" என்று அவர் அசையாது நின்றுகொண்டு தம் பாக்கெட் கடிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டே சொன்னார்: “எவ்வளவு நேரந்தான் இப்படியே போய்க் கொண்டிருப்பது? இந்த முடிவற்ற விசாரணைக்கு நாம் ஒரு முடிவு காணவேண்டும் என்பது உனக்குத் தெரிய வில்லையா?' என்றார் அவர். கடிகாரத்தின் மேல் மூடியை டக்கென்று மூடிவிட்டு, அந்த அறையின் மூலையில் இருளுக்குள் தெரியும் இரண் டாம் அலெக்ஸாந்தரின் சிலையைப் பார்த்தவாறே மேலும் பேசினார்: நீ கஷ்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக நீ நினைக்கிறாய், நான் தான் உன்னைச் சிறையில் வைத்துப் பார்க்க வேண்டும் என விரும்புவதாக நீ கருதுகிறாய். நீ நினைப்பது பெருந்தவறு. நான் எதற்காக அப்படி விரும்ப வேண்டும்? நீ சிறையிலே கிடப்பதில் எனக்கென்ன லாபம்" "பின்னே என்னைப் போக விடும்? அவரது தெளிந்த முகத்தில் ஒரு நடுக்கம் பரந்தோடி யது; அவரது இடது கண் இமை தட்டி மூடியது. "என்னால் முடியாது" என்று அவர் சொன்னார்; சொல்லும்போதே வரட்டுக் குரலில் - இருமினார்; தமது உறுதியான விரல்களால் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டார். அவரது வலது கரத்தின் சுட்டு விரலில் கன மான மோதிரம் கிடந்தது; அது திருமண மோதிரமாகத் தானிருக்கவேண்டும். "உன் பிரயாணத்தைப் பற்றி எனக்குச் சரியான விளக்கம் வேண்டும்; நான் வெளியே போய் விட்டு, கால் மணி நேரத்தில் திரும்பி வருவேன், நான் போன பிறகு நன்றாக யோசித்துப் பார்; முடிவுக்கு வா. ஒரு வாக்கு மூலம் எழுதிலை.” அவர் கதவருகே சென்ஜர்; நின்றார். கதவின் கைப் பிடியைப் பிடித்துக் கொண்டே அமைதியாகச் சொன்