பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எப்படி எழுதினேன்? (மாக்ஸிம் கார்க்கி) உயிர்வாழும் போராட்டத்தில் மனித உள்னத் தின் தற்காப்பு உணர்ச்சி இரு மாபெரும் சிருஷ்டி சக்திகளை வளர்த்துவிட்டது, அறிவும் கற்பனையுமே இவ்விரு சக்திகள். முதலாவது சக்தியான அறிவு என்பது இயற்கை நியதியை, சமுதாய நியதியைக் கவனித்து, பொருத்தம் பார்த்து, தள்ளுவன தள்ளிக் கொள்ளுவன கொள்ளும் திறமையேயாகும்; அதா வது அறிவு என்பது சிந்திக்கும் திறனாகும். சாராம் சத்தில் கற்பனையும் சிந்தனை வழிப்பட்டதே. எனி னும் கற்பிதமான உருவங்களை - கலாரூபத்தில் சிந்திப்பதே கற்பனைக்குப் பிரதானம். : கற்பனை என்பது மனித குணா குண் - உணர்ச்சிகளை, ஆசா பாசங்களை முன்னிலைப் பொருள்களோடும், இடை யாத இயற்கை - நியதியோடும் ஒட்டுறவாக்கிக் காணும் திறன் என்று சிலர் சொல்லலாம். காற்றின் முனகலையும், பழங்கதை சொல்லும் படித்துறையையும், வியர்வை அரும்பும் ; ஜன்னல் கண்ணாடிகளையும் நாம் கண்டிருக்கிறோம்; கேட் டிருக்கிறோம். இந்த மாதிரியான கற்பிதத்தால் நமக்கு இயற்கை நியதியை லகுவில் உணர்ந்து கொள்ள முடிகிறது. இலக்கியப் பாணி, அதன் பாதையின் அடிப் படைத் தன்மைகள், கற்பனார்த்தமும் எதார்த்த முமே யாகும். எதார்த்தம் என்பது வாழ்க்கைத்