பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரல்கள் தீர்மான கதியற்று, கீழ் ஸ்தாயி சுரக் கட்டை களின் மீது உலவியது; அவளது வலது கரம் தானமற்ற மத்திம ஸ்தாயியின்மீது விளையாடியது. வெகு நேரம்வரை நான் அவளது நடுங்கும் கரங்களையே கவனித்துக் கொன் டிருந்தேன், அவற்றின் அசைவிலே ஏதோ ஒரு குழப் பத்தை, கூச்சத்தை, சோகத்தை உணர்வது போல எனக்குப் பட்ட து ... என்றாலும் பியானோவின் சரக்கட்டைகளோ கெக்கலி யோடு சிரிப்பது போலத் தோன்றின.. ஆரம்பத்தில் அந்த கீதத்தின் மூர்ச்சை எனக்குப் பிடிபடவில்லை. அவளது ஆலாபனையின் ஆரோகண அவரோகணங்கள் தொடர் பற்று ஒலித்தன; கேந்திர சுரஸ்தானங்களின் ஆழ்ந்த கெடு மூச்சுக்கள் அழுத்தமாக எதையோ திரும்பத் திரும்பத் கூறுவதாகப்பட்டன. அந்த சங்கீதத்தின் பூர்ரை , tA மும் இலையுதிர் காலத்தைச் சித்தரிப்பது போலிருந்தது; அறுவடையான வயல்வெளி, வாடிப் போன புல்வெளி, குளுமையும் வாடையும் கலந்த ஊதைக் 'காற்று முதலிய வற்றைப் பிரதிபலிப்பது போலத் தோன்றீன். அந்த மனோ சித்திரத்தில், அந்த ஊதைக் காற்றின் ஸ்பரிலத் கால் நடுங்குகின்ற காட்டு மரங்கள், அவை ... தீர்த்துக் சிதறும் பொன்னிற இலைகள் எல்லாம் தெரிந்தன்; தூரத் தில் எங்கோ கண்காணாத தேவாலயத்திலிருந்து சோகமய பாக மங்கி யொலிக்கும் கண்டாமணி யோசையும் கூடக் கேட்பது போலிருந்தது.... அந்த வயல் வெளியில் தலையில் எதுவுமே அணியாமல் ஒரு மனிதன் நிற்கிறான். அவன் தன் கரங்களை ஆகா யத்தை நோக்கி உயர்த்தியவாறே, ஓடுகிறான்; அந்த ஊதைக் காற்று அவனை உந்தித்தள்ள ஓடுகிறான்; அடிக்கடி திரும் பித் திரும்பிப் பார்த்தவாறே ஓடிக் கொண்டிருக்கிறான். அவனோடு கூடவே மங்கிப் போய் இனத் தெரியாது ஒலிக்கும் ஒரு கர்ஜனைக் குரலும் தொடர்ந்து செல்கிறது; போகப் போக அந்த 'வயல் வெளி பெரிதாகிறது; அகன்று விரிகிறது...... அந்த வயல் வெளியில், அந்த மனிதனின் உருவம் குறுகி, சிறிதாகி, தூரத்தில் சென்று சென்று மறைந்தே போய் விடுகிறது...