பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 அந்தப் பெண் வாசிப்பதை நிறுத்திவிட்டு அசைவற்று உட்கார்ந்தாள்; அவளது கைகள் சோர்ந்து தொங்கின; அப்படியே அவள் வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். நான் அவளைப் பூக்களுக்கு ஊடாக, எந்தவிதச் சிந் தனையற்றுப் பார்த்தேன்; என் இதயத்தில் ஒரு அழகிய எதாவி இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது; என் நினைவில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான், எக்கார ணம் கொண்டும் நான் என் மனதை இழந்துவிடக் கூடாது என்பதுதான். பிமகு அவளது வலது கை மீண்டும் ஒரு முறை மெது வாக விருப்பத்து விழுவது போல, அந்த வாத்தியத்தின் ஈரக்கட்டைகளின் மீது படிந்தது; மீண்டும் அந்த வெற்றிப் பெருமிதமான இசை மயக்கத்தில் நான் மூழ்கிவிட்டேன். நான் கேட்டேன்; கண்களை மூடியவாறே கேட்டுக் கொண் டிருக்கேன். ஒரு பெரிய ஜனத்திரள் வெள்ளம் ஒன்றுகூடி ஓராதாக, யாரோ ஒருவனைச் சூழ்ந்து கொண்டு கோப மும் குழப்பமும் நிறைந்த கண்ணீரோடு அவனை மன்றாடிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது. அந்தச் சங்கீதம் வேகமும் கனமும் கொண்ட சக்தியாக விளங்கி யது; இவ்வளவு சின்காஞ் சிறிய பெண்ணொருத்தி நெருப்புப் பிழம்பாக ஜொலிக்கும் சங்கீதத்தை வாசிப்பது எனக்கு அதிசயமாகப்பட்டது. இந்த இரண்டாவது வாசிப்பும் என் பிரக்ஞை உணர்ச் பியை பாழுங்க அடித்து மங்கச் செய்து விட்டது. வாசித்தது போதும், நிறுத்து, கடால்யா" என்று அதிகான் கோபத்தோடு 'இரைந்தார். அப்போது அவர் என்னருகே கின்று கொண்டிருந்தார். அவள் தன் தலையைத் திருப்பினாள் ; எனினும் அவள் கரங்கள் வாத்தியத்தின் மீதே இருந்தன. அவளது முகம் சின்னஞ் சிறிதாக, ஒரு பறவையின் முகம்போல இருந்தது. பெற்றிப் பொருத்துக்கள் மிகவும் ஒடுங்கி யிருந்தன. அவ ளது. மூக்குக் கூறியதாகவும், கண்கள் அகன்று நீல நிற மாகவும் இருந்தன.