பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23. “நான் 'அரெஸ்ட் பண்ணிய அந்த மனிதன் எங்கோ ஓடிப் போய்விட்டான். பார்த்தாயா? என்று கூறிக் கொண்டே, அறைக்குள் நடந்தார். ஒரு தடித்த பகைக் குழாயில் அவரது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது; லேசாக நடுக்கம் காணும் தமது விரல்களால் அவர் தமது தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். "ஓடிப் போய்விட்டானா?" என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டாள் அந்தப் பெண். “அப்படித்தான் தெரிகிறது..." அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக், கிறார்கள் என்பதை நான் அதற்குள் உணர்ந்து கொண் டேன். என்றாலும் நான் உடனடியாக அந்த வேலிக்கும்: திரைக்கும் இடையிலிருந்த மறைவிலிருந்து வெளிவர முடிய வில்லை, அப்படி வந்தால் அது என்னவோ போலிருக்கும்; அவர்களுக்குத் திகைப்பாக இருக்கும். “அவன் எப்படிப் போனான்?" என்று கேட்டான் அவள். “ஜன்னல் வழியாக. அப்படித்தான் போயிருக்க வேண்டும்... அவன் ஒரு முழுப் பைத்தியம். அவன் கரசமாப் போக?” என்று கூறிக்கொண்டே அதிகாளி கதவின் அருகே வந்தார். அந்தப் பெண்ணும் இடத்தை - விட்டு எழுந்து அவ ரைப் பின்பற்றினாள். அவள் நடக்கும் போது தன் மேலாக் குத் துணியை மார்பின்மீது இழுத்து விட்டுக் கொண்டாள். இந்தச் சமயத்தில் நான் வெளியே வந்து அவர்கள் முன், எதிர்ப்பட்டேன். “அடப்பாவி இங்கே என்ன பண்ணிக் கொண்டிருந் தாய்?” என்று திடீரென்று நின்று கொண்டே கூச்சலிட் டார். அதிகார். அவரது கண்கள் இமை 'தட்டிச் சிமிட்டின. அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். பிறகு தம் புருவங்களைக் கோபத்தோடு சுழித்தார் ) தோள்களைச் சிலுப்பிக் கொண்டார்.