பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


எப்போதுமே இந்த நேரத்தில்தான் பாடுவது வழக்கம். சரி சரி இருக்கட்டும்...ஸால்டி கோவ் இவனைக் காவலாளியிடம் ஒப்படை!"

கொழுத்து வியர்த்துப் போன ஒரு போலீஸ்காரன், அவன்தான் ஸால்டிகோவ்-அவன் என்னை அதிசயம் தோய்ந்த கண்களோடு ஏற இறங்கப் பார்த்தான், அல்னது கண்களில் குடி மயக்கமும், குதூகலமும் குமிழிடுவது போலத் தோன்றின. பிறகு அவன் உற்சாகமாக அவருக்குப் பதிலளித்தான்:

"இதோ இப்போதே ஸார்!"

ஆனால், அவன் என்னைக் காரியாலயத்துக்குள் கடத்திச் சென்ற போது என்னைக் கண்டிப்பது மாதிரி பேசினான்:

“என்னப்பா புத்தி உனக்கு! இதென்னமோ ஒரு சந்தை அல்லது வேறெ என்னமும்னு நினைச்சி உலாத்திக் கிட்டிருந்தியா? உன் துணிச்சலுக்கு இது இடமில்லேப்பா. அதனாலெ, உனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல, இதனாலெ உனக்கு என்னப்பா லாபம்?"

"நான் வெறுமனே சங்கீதம்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்...”

ஒரு 'பார்க்'கிலே அதைக் கேட்கணும்”

பிறகு அவன் என்னை அந்தக் காவலாளியை நோக்கிக் கல்தாக் கொடுத்துத் தள்ளிக் கொண்டே குலைத்தான் :

"பயல்களா, இவனைக் கொண்டு போங்கள்!"