பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அறிஞர் அண்ணா


இருக்கும் மட்டும், உன் போன்ற வீரர்கள் கூவினாலும், கொக்கரித்தாலும், எம்மை அசைக்க முடியாது. வாளை வீசுவதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணாதே! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

மோக : காகப்பட்டரே! மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர், மக்கள் மனமயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும். மாவீரர்களே! மன்னன் சிவாஜியின் சபையிலே வரம்பு மீறி பேசினேன் என்று என்னைத் தண்டிக்கட்டும். ஒரு வார்த்தை உங்களுக்கு. ஆரியருக்கு அடிப்பணியாதீர். அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர். அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ஆறு, பத்து, இருபது தலையுடன் ஆமை வராக முகமுடையான், அண்ணன் தம்பி மகனுடையான், அந்தப்புரத்திலே அறுபதினாயிரம் பேருடையான் என்று கூறி, கடவுளையே நிந்திக்கும் கயவர்கள் அவர்கள். அவர்களுடைய கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்.

சிவா : மோகனா! தோழமையின் எல்லையையும் தாண்டி விட்டாய். நில்!

1. தள : இதுவரை மன்னர் முன் இப்படி எதிர்த்துப் பேசியவர் யாருமில்லை.

2. தள : மகராஜ் சினங்கொண்டு சீரழிவாகப் பேசிய இச் சிறுமதியாளனைச் சிறையிலே அடையுங்கள்.

காக : துஷ்டன்! துராத்மா! வேத நிந்தகன்! நாஸ்திகன்.

(மோகன் வாளை உருவ)

சிவா : மோகன்! வாளைக் கீழே போடு.

(வாளை போட)

மோக : மகராஜ்!