பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

133


சிவா : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.

மோக : மகராஜ்! எனக்கா இந்தத் தண்டனை?

சிவா : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?

மோக : தேசப்பிரஷ்டமா?

சிவா : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ.

(வீரர்கள் நெருங்க)

வீரர்களே! விலகி நில்லுங்கள். அவன் போவான்! சர்தார்!

(போகிறான்)

காட்சி - 28

இடம் : வீதி

உறுப்பினர்கள். : சாது, ரங்கு.

(சாது பாடிக்கொண்டு வர, ரங்கு எதிரே வந்து)

ரங்கு : இது யாருடைய பாடல்?

சாது : ஐயனுடைய பாடல்?

ரங்கு : அது யாருடா அவன் ஐயனும் மெய்யனும்?

சாது : கோபமாகப் பேசும் தங்களையும், சாமான்யனான என்னையும் எவன் படைத்தானோ அவனே சர்வ லோகங்களிலும் நடக்கும் காரியத்துக்குக் கர்த்தா. அவன் அருளால் இந்தக் கீதம் பாடினேன். ஆகவேதான் தாங்கள் யாருடைய பாடல் என்று கேட்டவுடன் ஐயனுடைய பாடல் என்று சொன்னேன்.

ரங்கு : ஏண்டா! நீ பெரிய வாயாடியா இருப்பபோல இருக்கே. சமஸ்கிருதம் தெரியுமோ, நோக்கு?

சாது : தெரியாது.

ரங்கு : காயத்திரி தெரியுமோ?

சாது : தெரியாதய்ய.