பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

135



காட்சி - 29

இடம் : மன்றம்

உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், இந்து, சாந்தாஜி.

இந்து : அப்பா வாள் ஏந்தக் கூடாது. வாள் ஏந்தக் கூடாது என்று கூவினார். தண்டனையும் அதுபோலவே ஆகிவிட்டது.

மோக : இந்து! அவர் உன் க்ஷேமத்தைக் கருதி அவ்வாறு கூறிவந்தார். நீயும் ஒரு நாள் 'வாள் -- கேவலம் ஒரு இரும்புத்துண்டு' என்று கூறினாய். நிலைமையும் அப்படித்தான் ஆகிவிட்டது. நான் மராட்டியத்தின் மானத்தை மீட்கப் போர் புரிய வாள் ஏந்தி நின்றேன். மன்னன் ஆரிய குருவுக்கு அடி பணிந்துவிட்டார். இனி யார் வாளேந்தி என்ன பயன்? மராட்டிய வீரனுக்கு வாள் இருப்பது புகழ் தரும். ஆரிய ஏவலராக மராட்டியர் ஆன பிறகு வாள் எதற்கு?

(இந்து போக, மன்னர் வருதல் மோகன் தாள் பணிந்து)

மகராஜ்! மகராஜ்! தாங்களா?

(மண்டியிட்ட மோகனைத் தூக்கி)

சிவா : மங்காத மராட்டியமே! எழுந்திரு. உன்னை நான் இழக்க வேண்டிய அளவுக்கு என் நிலை ஆகிவிட்டது. தோழா! உன்னை நான் தண்டித்தேன். என்றுதானே கருதிக் கொண்டாய்? தண்டனையல்லடா தம்பி அது. சாந்தாஜி யின் மகளை நீ அடைய, உனக்கு விடுதலை தந்தேன். என் பொருட்டு அல்லவா இந்துவை நீ இழக்க இருந்தாய்.

மோக : மகராஜ் என்ன இது! என் தண்டனை ரத்தாகிவிட்டதா? இனி நான் வாள் ஏந்தலாமா?

சிவா : இனி நீ வாள் ஏந்திப் பலன் என்ன? மோகனா! பழமையின் தாள் ஏந்திய மன்னனிடம் இனி வாள் ஏந்துவோர் இருந்து பலன் இல்லை. ஆம்! இவ்வளவு வயது வரை போரிட்டுப் போரிட்டு சிருஷ்டித்த