பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அறிஞர் அண்ணா


ராஜ்யத்தை நான் ஆசி பெறாமல் ஆள முடியாத அளவுக்கு மக்களிடம் மனமயக்கம் இருக்கிறது. மோகன், நாம் மன்னர்களை எதிர்க்கலாம்; எதிரிகளை அடக்கலாம்; ஆனால் நம் மக்களையே என் மீது ஏவி விட முடியும் அவர்களால், இன்றைய நிலையிலே. ஆகவேதான் நான் பணிந்தேன்.

மோக : ஆகா, மகராஜ்! நான் எதிர்ப்பார்த்தபடியே இருக்கிறது.

சிவா : மோகன் நான் ஏற்படுத்திய ராஜ்யம் நிலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்! மராட்டிய மண்டலத்திலே ஏரி, குளம், குட்டை, ஆறு, மடு எல்லாம் வறண்டுவிட்டன. வயல்கள் வெடித்து கிடக்கின்றன. போர் செயலினால் மக்கள் ஏழைகளாயினர். இந்த நிலையிலே வறுமை தாண்டவமாடும் இந்த நேரத்திலே பதினோராயிரம் பிராமணர் குடும்பங்களுக்கு நான்கு மாதங்கள் சமாராதனை. தங்கள் உயிரை எனக்காக, அரசுக்காக அளித்த மராட்டிய வீரருக்கு என்னால் விருந்திட முடியவில்லை. என் செலவில் வீணர்கள் உண்டு கொழுத்தனர். துலாபாரம், அதனால் வேறு செலவு. சந்திரமோகன்! என் அரசு ஆரம்பமாகும் போதே பொக்கிஷம் சூன்யமாகிவிட்டது. ஒரு கோடியே நாற்பத்து எட்டு லட்சமடா நான் கொட்டி அழுதேன். நம் தரணி இப் பாரத்தைத் தாங்காது. ஆகவே வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ, மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு. வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு. நாடு முழுவதும் வீசு. பட்டித் தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கு. சந்திரமோகனா! சகலரையும் சந்திரமோகன்களாக்கு. போய்வா! ஜெயம் பெறுவாய்.

(சிவாஜி போக, சாந்தாஜி, இந்து வருதல். சாந்தாஜி மோகனிடம் மாலையைத் தருதல். இந்துவும் மோகனும் மாலை மாற்றிக் கொண்டு பாட்டு)

ச. மெய்யப்பன்

அறக்கட்டளை